Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாட்டிற்கு வெள்ள நிவாரணம் கோரிய மனு தள்ளுபடி.! வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு..!!

Senthil Velan
வெள்ளி, 12 ஜனவரி 2024 (11:28 IST)
தமிழ்நாட்டிற்கு உடனடியாக வெள்ள நிவாரணம் வழங்க மத்திய அரசுக்கு உத்திரவிட கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
 
மிக்ஜாம் புயல் மற்றும் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் பெய்த கனமழையால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். கன மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது. ஆனால் மத்திய அரசு அதற்கு செவி சாய்க்கவில்லை.
 
இந்நிலையில் தமிழ்நாட்டிற்கு வெள்ள நிவாரணமாக 8000 கோடி ரூபாய் வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிட கோரி கே.கே ரமேஷ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
ALSO READ: ஆளுநருக்கு எதிராக போராட்டம்.! 178 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு.!!
இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள், தமிழ்நாடு அரசுக்கு பிரச்சனை இருந்தால் அவர்கள் முறையிடுவார்கள் என தெரிவித்தனர்.  இது நிர்வாகம் சம்பந்தப்பட்ட பிரச்சனை எனவும் அதை தமிழக அரசு பார்த்துக் கொள்ளும் எனவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர். எனவே இந்த விவகாரத்தில் தலையிட முடியாது என கூறி நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை 10 மாவட்டங்களை வெளுக்க போகும் கனமழை! - வானிலை அலெர்ட்!

மகாராஷ்டிரா: மக்களவைத் தேர்தலில் சரிவு கண்ட பாஜக சட்டமன்ற தேர்தலில் வெற்றி - ஐந்தே மாதங்களில் என்ன நடந்தது?

57 ஆண்டுகளில் இல்லாத மோசமான தோல்வி.. எதிர்க்கட்சி தலைவர் இல்லாத மகாராஷ்டிரா..!

கனடா கண்ட மோசமான பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.. கொதித்தெழுந்த மக்கள்..!

அமெரிக்க தேர்தலை விட இந்திய தேர்தல் மேலானது: எலான் மஸ்க்

அடுத்த கட்டுரையில்
Show comments