Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

3வது கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்ற இந்திராணி முகர்ஜி! அடுத்து என்ன?

Advertiesment
MUMBAI
, வெள்ளி, 4 அக்டோபர் 2019 (09:12 IST)
ஷீனாபோரா கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் இந்திராணி முகர்ஜிக்கு மும்பை நீதிமன்றம் விவாகரத்து வழங்கியுள்ளது. 
 
கடந்த 2012 ஆம் ஆண்டு மும்பையில் கொலை செய்யப்பட்ட இளம் பெண் ஷீனாபோரா வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார் ஷீனாபோராவின் தாயார் இந்திராணி முகர்ஜி. இந்திராணி முகர்ஜியுடன் சேர்ந்து இந்த கொலையில் சம்மந்தபட்ட அவரது 3-வது கணவர் பீட்டர் முகர்ஜியும் சிரையில் அடைக்கப்பட்டுள்ளார். 
 
பீட்டர் முகர்ஜி பிரபல தொலைக்காட்சி நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி ஆவார். இந்நிலையில் கடந்த ஆண்டு பீட்டர் முகர்ஜியிடமிருந்து விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்தார் இந்திராணி முகர்ஜி. 
இந்த விவாகரத்து வழக்கு மும்பை பந்த்ராவில் உள்ள குடும்ப நல நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நேற்று இந்திராணி முகர்ஜி, அவரது கணவர் பீட்டர் முகர்ஜி ஆகியோருக்கு மும்பை விவாகரத்து வழங்கியுள்ளது.
 
மேலும், இருவருக்கும் விவாகரத்து வழங்கப்பட்டுவிட்டதால் இருவர் பெயரிலும் உள்ள சொத்துக்கள், வங்கி முதலீடுகள் உள்ளிட்டவற்றை பங்கீடு செய்வது அடுத்தக்கட்ட நடவடிக்கையாக இருக்கும் என தெரிகிறது.
 
இந்திராணி முகர்ஜி மும்பை பைகுல்லா பெண்கள் சிறையிலும், பீட்டர் முகர்ஜி ஆர்த்தர் ரோடு சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது கூடுதல் தகவல். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குடும்பத்தையேக் கொன்ற நபர் – ஒரு ஆண்டுக்குப் பிறகு ஒப்புதல் வாக்குமூலம் !