Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒருவருடைய பெர்சனல் டேட்டா வேண்டுமா? வெறும் 99 ரூபாய்க்கு கிடைக்கும்.. அதிர்ச்சி தகவல்..!

Mahendran
வெள்ளி, 27 ஜூன் 2025 (16:37 IST)
தனிப்பட்ட தரவு பாதுகாப்பு என்பது ஒரு கேலிக்கூத்தாகிவிட்டது என்பதற்கு தினசரி நடக்கும் சம்பவங்கள் சான்றாகின்றன. 'டிஜிட்' நிறுவனம் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையின்படி, நமது தனிப்பட்ட விவரங்கள் டெலிகிராம் தளத்தில் வெறும் 99 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது பெரும் கவலையையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. டெலிகிராம் 'பாட்' ஒன்றின் மூலம் எந்த ஒரு நபரின் தகவல்களையும் வாங்க முடியும் எனத் தெரியவந்துள்ளது.
 
டெலிகிராம் நிறுவனம், சர்ச்சைக்குரிய அந்த 'பாட்' அகற்றப்பட்டுவிட்டதாக தெரிவித்துள்ளது. "தனிப்பட்ட தரவுகளைப் பரப்புவது எங்கள் சேவை விதிமுறைகளால் திட்டவட்டமாக தடைசெய்யப்பட்டுள்ளது," என்றும் அத்தகைய உள்ளடக்கங்கள் கண்டறியப்பட்டால் உடனடியாக அகற்றப்படும் என்றும் டெலிகிராம் தெரிவித்துள்ளது.
 
'டிஜிட்' செய்தி நிறுவனத்தின் செய்தியாளர் ஒருவர், மொபைல் எண் மூலம் தகவல்களை வழங்கும் ஒரு டெலிகிராம் 'பாட்டைக்' கண்டறிந்தார். அந்த 'பாட்', ஒவ்வொரு தேடலுக்கும் ரூ.99 கட்டணம் கோரியது. அதிக தகவல்களுக்கு மாதத் திட்டம் ரூ.4,999 வரை இருந்தது. செய்தியாளர் ரூ.2,499 திட்டத்தை வாங்கி தனது எண்ணை சரிபார்த்தபோது, அவரது ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்டு உட்பட அனைத்து விவரங்களும்  துல்லியமாக இருந்தது. இந்த சோதனை பல எண்களிலும் துல்லியமாகவே இருந்தது.
 
நமது தரவுகள் பாதுகாப்பாக இல்லை என்பதையும், 'டார்க் வெப்'பில் அவை கிடைக்கப்பெறுவதையும் இது காட்டுகிறது. தவறான நபர்களுக்கு இந்த 'பாட்' கிடைத்தால், தகவல்கள் தவறாக பயன்படுத்தப்படலாம். அரசு இச்சிக்கலை தீவிரமாக அணுகி தீர்வு காண வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காந்தி ஜெயந்தி தினத்தில் காந்தி சிலைக்கு காவி துண்டு அணிவிப்பு! பாஜகவால் சர்ச்சை..!

காலையில் குறைந்த தங்கம் விலை மாலையில் உயர்வு.. இன்னும் உயருமா?

கரூரில் 41 பேர் உயிரிழந்த நிலையில் ஆயுத பூஜை கொண்டாடிய தவெக.. பிரச்சார பேருந்துக்கு பூஜை..!

நெட்ஃபிளிக்ஸை கேன்சல் செய்யுங்கள்: எலான் மஸ்க் பதிவு செய்த கருத்தால் பரபரப்பு..!

கேரளப் பள்ளிகளில் 1,157 கட்டிடங்கள் ‘பயன்பாட்டிற்கு உகந்ததல்ல’: ஜூம்பா நடனமும் எதிர்ப்பும்

அடுத்த கட்டுரையில்
Show comments