Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

துர்கா சிலை கரைத்தபோது துயரம்.. வெள்ளத்தில் மக்கள்! – ஷாக்கிங் வீடியோ!

Advertiesment
Video
, வியாழன், 6 அக்டோபர் 2022 (09:23 IST)
மேற்கு வங்கத்தில் துர்கா பூஜையின்போது ஆற்றில் சிலையை கரைத்தவர்கள் அடித்து செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக நவராத்திரி நிகழ்ச்சி சிறப்பாக கொண்டாடப்பட்டு வந்தது. நவராத்திரியின் இறுதி நாளில் துர்க்கை சிலையை ஆற்றில் கரைப்பது வடமாநிலங்களில் சில பகுதிகளில் வழக்கமாக உள்ளது.

இந்நிலையில் மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரி பகுதியில் துர்க்கை சிலையை மால் ஆற்றில் கரைத்தபோது திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அந்த வெள்ளப்பெருக்கில் பலரும் அடித்து செல்லப்பட்ட வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வெள்ளப்பெருக்கில் அடித்து செல்லப்பட்ட 7 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். மாயமானவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Edited By: Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழர்கள் இந்துக்கள் இல்லை.. ட்விட்டரில் ட்ரெண்டாகும் #TamilsAreNotHindus