சாணம், கோமியத்தை உடலில் பூசிய மக்கள்....முன்னாள் முதல்வர் ட்வீட்

Webdunia
புதன், 12 மே 2021 (23:21 IST)
சாணமும், கோமியமும் உடலில் பூசிக்கொண்டு யோகாசனம் செய்தால் கொரொனா தொற்றுப் போய்விடும் என்ற வீடியோவை பதிவிட்டு முன்னாள் முதல்வர் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் ஒருநாளில் சுமார் 4 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் கொரொனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தினமும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர். மக்களைக் கொரொனா தொற்றிலிருந்து பாதுகாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

கொரொனா தடுப்பூசியாக கோவிஷீல்ட், வேக்‌ஷின் போன்றவை பயன்படுத்தப்படுகிறது.

இந்நிலையில். குஜராத் மாநிலம் அகமதாபாத் உள்ள ஒரு கோவியில் பக்தர்கள் உடம்பில் மாட்டுச்சாணம் மற்றும் கோமியத்தை உடலில் பூசிக் கொள்ளும் வீடியோ வைரலானது குறிப்பிடத்தக்கது.

இந்த வீடியோ குறித்து, உத்தரபிரதேச மாநில முன்னாள் முதல்வர் அகிலேஷ்யாதவ் கூறியுள்ளதாவது: இதைப்பார்த்து நாங்கள் அழுவதா சிரிப்பதா எனத்தெரிவித்துள்ளார்.,

வடமாநிலங்களில் சில மாட்டும் சாணமும், கோமியமும் கொரோனாவைத் தடுக்கும் என அதை உண்டு வருகின்றனர். இப்படி மாட்டும் சாணமும் கோமியமும் அருந்துவதால் புதிய நோய்கள் மனிதர்களுக்குப் பரவும் வாய்ப்புள்ளதாக இந்திய மருத்துவக் கவுன்சிலலும், இதனால் ஒன்றும் பயனில்லை என சுகாதார நிலையமும் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நவம்பர் 27-ல் வங்கக் கடலில் மேலும் ஒரு தாழ்வு மண்டலம்! இந்திய வானிலை ஆய்வு மையம்

சீமான்தான் நம்பர் ஒன்!.. டிஜிட்டல் சர்வே மூலம் கிடைத்த ரிசல்ட்!..

வாக்காளர் பட்டியல் SIR படிவத்தை நிரப்ப ஏஐ தொழில்நுட்பம்: புதிய முயற்சி!

40 ஆண்டு அரசியல்.. 10 முறை முதல்வர்.. நிதிஷ்குமாரின் சொத்து மதிப்பு ரூ.1.64 கோடி, 13 பசுக்கள் தானா?

உலகிலேயே கஷ்டமில்லாத பணி கவர்னர் பணி.. கனிமொழி எம்பி கிண்டல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments