Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இப்படியெல்லாம் பெயர் வைக்கிறாங்களா? இரட்டை குழந்தைகள் பெயர் கோவிட் – கொரோனா!

Webdunia
வெள்ளி, 3 ஏப்ரல் 2020 (12:45 IST)
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவால் மக்கள் அச்சத்தில் இருக்க அதை தனது இரட்டை குழந்தைகளுக்கு பெயராக சூட்டியுள்ளனர் தம்பதினர் ஒருவர்.

கடந்த மூன்று மாதங்களில் கொரோனா என்ற பெயரை கேட்டாலே மக்கள் அச்சமும், அதிர்ச்சியும் கொள்ளும் அளவிற்கு கொரோனா பெரும் உயிர்கொல்லி நோயாக மாறியுள்ளது. கொரோனாவால் உலக அளவில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் குழந்தைகளுக்கு கொரோனா என பெயரிடுவது தற்போது ட்ரெண்டாகி வருவதாக தெரிகிறது. சத்தீஸ்கரில் ஒரு தம்பதியினர் தங்களுக்கு பிறந்துள்ள குழந்தைக்கு கொரோனா என பெயரிட்டிருப்பதாக செய்திகள் பரவின. தற்போது ராய்ப்பூரில் ப்ரீத்தி வர்மா என்ற பெண் ஒரே பிரசவத்தில் இரட்டை குழந்தைகளை பெற்றுள்ளார். அந்த குழந்தைகளில் ஆண் குழந்தைக்கு கொரோனா என்றும், பெண் குழந்தைக்கு கோவிட் என்றும் பெயரிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து அந்த குழந்தைகளின் தாயார் ப்ரீத்தி வர்மா தான் குழந்தைகளை பெற எதிர்கொண்ட சிரமங்களை மனதில் கொண்டு இந்த பெயரை வைத்துள்ளதாக கூறியிருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கண்ணிமைக்கும் பொழுதில் காணாமல் போன உயிர்கள்! உத்தரகாண்ட் மேகவெடிப்பு அதிர்ச்சி வீடியோ!

உத்தரகாண்ட் நிலச்சரிவு.. வயநாடை விட மோசமா? ஒரு கிராமத்தையே காணவில்லை..

தவணை கட்டாததால் ஜேசிபி இயந்திரம் ஏலம்.. வங்கியில் புகுந்து ஊழியர்களை அடித்து நொறுக்கிய கும்பல்..!

விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.. தேதியை அறிவித்த ஈபிஎஸ்..!

கலைஞர் பல்கலைக்கழகம் மசோதா.. ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கவர்னர் ஆர்.என்.ரவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments