Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுமிக்கு தூக்க மாத்திரை கொடுத்து வன்கொடுமை! கர்ப்பமாக்கிய மந்திரவாதி தர்ம அடி!

Webdunia
புதன், 14 அக்டோபர் 2020 (12:37 IST)
தெலுங்கானாவில் உடல் நலக் குறைவான சிறுமிக்கு வைத்தியம் செய்வதாக கூறி கர்ப்பமாக்கிய போலி சாமியாருக்கு மக்கள் தர்ம அடி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் பகுதியை சேர்ந்தவர் பிரசாந்த். தன்னை மந்திரவாதி என்று கூறி கொண்ட அவர் பூஜைகள் மூலம் உடல் நல கோளாறுகளை சரிசெய்வதாக கூறி அங்குள்ள மக்களை ஏமாற்றி வந்துள்ளார். அவரை நம்பி உடல் நலமற்ற தங்கள் 15 வயது பெண் குழந்தையை சிகிச்சைக்கு அழைத்து வந்துள்ளனர் ஒரு தம்பதியர். மூன்று மாதங்கள் தொடர்ந்து பூஜைகள் செய்து வைத்தியம் செய்ய வேண்டும் என மந்திரவாதி சொல்லவும் இவர்களும் தினமும் சிறுமியை அழைத்து வந்துள்ளனர்.

ஒருநாள் திடீரென சிறுமிக்கு மிகவும் உடல் நலம் சரியில்லாமல் போனதால் மருத்துவமனை அழைத்து சென்றுள்ளனர். அங்கு சிறுமி கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறியது பெற்றோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து சிறுமியிடம் விசாரித்ததில் மந்திரவாதி தினமும் தூக்க மாத்திரை கொடுத்து தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவதாக மிரட்டியதாகவும் கூறியுள்ளார்.

இதையறிந்து ஆத்திரத்துடன் சென்ற பொதுமக்கள் மந்திரவாதி பிரசாந்தை பிடித்து தர்ம அடி அடித்து சாலையில் இழுத்து சென்று போலீஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். சிறுமி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

அடுத்த கட்டுரையில்