பொது இடத்தில் தும்மியவரை சரமாரியாக தாக்கிய பொதுமக்கள்: வைரலாகும் வீடியோ

Webdunia
வியாழன், 19 மார்ச் 2020 (19:13 IST)
பொது இடத்தில் தும்மியவரை சரமாரியாக தாக்கிய பொதுமக்கள்: வைரலாகும் வீடியோ
மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா பீதி காரணமாக பொது இடத்தில் தும்மிய ஒருவரை பொதுமக்கள் சரமாரியாக தாக்கியதாக கூறப்படும் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
இந்தியாவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் ஒன்று மகாராஷ்டிர மாநிலம். இம்மாநில பொதுமக்களிடையே கொரோனா அதிக பயத்தை ஏற்படுத்தி உள்ளது 
இந்த நிலையில் பொது இடத்தில் சுகாதாரமற்ற முறையில் ஒருவர் தும்மியதாக தெரிகிறது. இதனையடுத்து அந்த நபரை பொதுமக்கள் சரமாரியாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது 
 
பொது இடத்தில் இருமும்போதும் தும்மும்போதும் கர்ச்சிப் வைத்து வாயையும் மூக்கையும் பொத்திக் கொண்டு இரும வேண்டும், தும்ம வேண்டும் என விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் நிலையில் சுகாதாரமற்ற முறையில் தும்மிய அந்த நபரை பொதுமக்கள் தாக்கியதில் எந்த தவறும் இல்லை என்றே இந்த நிகழ்வை பலர் நியாயப்படுத்தி கருத்து கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 18 மாவட்டங்களில் மழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்..!

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

முயல்வேட்டையில் ஈடுபட்ட 2 சிறுவர்கள் பரிதாப பலி.. திருவண்ணாமலையில் சோகம்..!

சபரிமலைக்கு மாலை போட்ட மாணவர் கருப்பு உடை அணிய தடை.. பள்ளி நிர்வாகத்திற்கு எதிர்ப்பு..!

வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்தால் நேபாளம் போல் புரட்சி வெடிக்கும்: ஆர்ஜேடி எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments