Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதலையை வனத்துறையினரிடம் ஒப்படைக்க பேரம் பேசிய மக்கள் -ருசிகர சம்பவம்!

Webdunia
வெள்ளி, 11 செப்டம்பர் 2020 (17:17 IST)
உத்தர பிரதேச மாநிலத்தில் உயிரியல் பூங்காவில் இருந்து வெளியேறிய முதலையை பிடித்த மக்கள் அதை வனத்துறையினரிடம் ஒப்படைக்க பணம் கேட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் லக்கிம்பூர் கெரி மாவட்டத்தில் துத்வா புலிகள் சரணாலயம். அங்கு பல வகையான காட்டு மிருகங்கள் உள்ளன. சமீபத்தில் அங்கு பெய்த பெருமழையால் முதலை ஒன்று தப்பித்து அருகில் உள்ள கிராமத்துக்குள் நுழைந்துவிட்டது. ஊருக்குள் முதலையைப் பார்த்த மக்கள் வனத்துறைக்குத் தகவல் தெரிவித்துளனர். ஆனால் அவர்கள் வருவதற்குள் கிராம மக்கள் தாங்களாகவே முதலையை பிடித்துள்ளனர். 

அங்கு வந்து வனத்துறையினரிடம் முதலையை தாங்கள் கஷ்டப்பட்டு பிடித்ததால் தங்களுக்கு 50,000 ரூபாய் பணம் தந்ததால்தான் கொடுப்போம் என சொல்லி பேரம் பேசியுள்ளனர். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் ஒரு கட்டத்தில் முதலையை ஒப்படைக்கவில்லை என்றால் சடடப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என சொன்ன பிறகே முதலையை ஒப்படைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

7 ஆயிரம் ரூபாயில் விமானம் செய்து அசத்திய பீகார் இளைஞர்! - வைரலாகும் வீடியோ!

பட்டப்பகல் படுகொலை; குற்றவாளி பட்டியலில் உதவி ஆய்வாளர்கள்! - அடுத்தடுத்து பரபரப்பு!

தேவாலயத்தில் பிரார்த்தனை நடந்தபோது பயங்கரவாத தாக்குதல்: 38 பேர் சுட்டுக் கொலை!

மல்லிகார்ஜுன கார்கேவின் இளைய மகன் கவலைக்கிடம்.. புற்றுநோய் பாதிப்பு..!

வௌவ்வால் வறுவலை சில்லி சிக்கன் என விற்ற கும்பல்! - சேலத்தில் அதிர்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments