பாகிஸ்தான் நாட்டில் தினசரி இரண்டு வேளை உணவுக்கு மக்கள் போராடி வருகின்றனர் என்று உத்தரபிரதேச மாநில முதல்வர் ஆதித்ய நாத் கூறியுள்ளார்.
உத்தரபிரதேச மாநிலத்தில் முதல்வர் ஆதித்ய நாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது.
இந்த நிலைவில் இம்மா நிலத்திலுள்ள கவுசம்பியில் நடைபபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்வர் ஆதித்யனாத் ரூ.612 கோடி மதிப்பிலான மொத்தம் 117 வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டி, திட்டங்களை தொடக்கம் மற்றும் கவுசாம்பி மஹோத்சம் என்ற நிகழ்ச்சசியையும் தொடங்கி வைத்து, உரையாற்றினார்.
அதில், நாட்டில், கடந்த 3 ஆண்டுகளான பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் 80 கோடி மக்களுக்கு இலவச ரேசன் வழங்கப்பட்டு வருகிறது. நமது அண்டை நாடான பாகிஸ்தானில் மக்கள் 2 வேளை உணவு கிடைப்பதற்கே வழியின்றி போராடி வருகின்றனர்.
நம் நாட்டிலுள்ள மக்கள் எவ்வித வேற்றுமையின்றி வளர்ச்சித் திட்டங்கள் பெருகின்றனனர். நாட்டில் சிறப்பு பாதுகாப்பு சூழலை உருவாக்குவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.