Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூகுள் பிளே ஸ்டோரில் பேடிஎம் மீண்டும் சேர்ப்பு.. உற்சாகத்தில் Paytm ! பயனாளர்கள் மகிழ்ச்சி.

Webdunia
வெள்ளி, 18 செப்டம்பர் 2020 (19:31 IST)
கூகிள் ப்ளே ஸ்டோரிலிருந்து பேடிஎம் அப்ளிகேசன் நீக்கப்பட்டுள்ளது பேடிஎம் பயனாளர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய நிலையில் தற்போது  மீண்டும் கூகுள் பிளே ஸ்டோரில்  பேடிஎம் சேர்க்கபட்டுள்ளது.

இந்தியாவில் பண பரிவர்த்தனைக்கு அதிகம் பயன்படுத்தப்படும் அப்ளிகேசனான பேடிஎம் கூகிள் ப்ளே ஸ்டோரிலிருந்து திடீரென நீக்கப்பட்டுள்ளது. இந்தியாவை தலைமையகமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த பேடிஎம் அப்ளிகேசன் பல மில்லியன் மக்களால் பண பரிவர்த்தனைக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கூகிள் சட்டத்திட்டங்களை மீறி செயல்பட்டதாக பேடிஎம் மீது நடவடிக்கை எடுத்துள்ள கூகிள் தனது ப்ளே ஸ்டோரிலிருந்து பேடிஎம் அப்ளிகேசனை நீக்கியது.

சூதாட்டம் தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபட்டதால் நீக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.

இது பேடிஎம் பயனாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம் பேடிஎம் நிறுவனத்தின் மற்ற ஆப்களான பேடிஎம் மால், பேடிஎம் மியூச்சுவல் பண்ட் போன்ற அப்ளிகேசன்கள் வழக்கம் போல செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், கூகிள் ப்ளே ஸ்டோரிலிருந்து பேடிஎம் அப்ளிகேசன் நீக்கப்பட்ட நிலையில் தற்போது  மீண்டும் கூகுள் பிளேயில்  பேடிஎம் சேர்க்கபட்டுள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

குமரி கடல் நடுவே உள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு படகு போக்குவரத்து ரத்து

ஓசி பீடி கொடுக்காத ஆத்திரத்தில் தலையில் கல்லை போட்டு கொலை.. மதுரையில் அதிர்ச்சி சம்பவம்..

பாலஸ்தீனை தனி நாடாக அங்கீகரித்த நார்வே, அயர்லாந்து! – கடுப்பான இஸ்ரேல் என்ன செய்தது தெரியுமா?

விமானத்தில் ஸ்டாண்டிங் பயணம்.. இண்டிகோ விமானத்தில் ஒரு பயணியால் பரபரப்பு!

ஏசி பேருந்துகளை இயக்குகிறது ஊபர் நிறுவனம்.. அனுமதி வழங்கியது அரசு..!

அடுத்த கட்டுரையில்