Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பயிற்சி பெறுபவர்களை பாதிக்கும் ஓட்டுநர் உரிமம் கட்டண உயர்வு

Advertiesment
பயிற்சி பெறுபவர்களை பாதிக்கும் ஓட்டுநர் உரிமம் கட்டண உயர்வு
, திங்கள், 9 ஜனவரி 2017 (13:20 IST)
நாடு முழுவதும் ஓட்டுநர் உரிமம், புதுப்பிப்பு, வாகன பதிவு உட்பட 13 சேவைகளுக்கான கட்டணத்தை மத்திய அரசு பல மடங்கு உயர்த்தியுள்ளது. இந்த கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனால் ஓட்டுநர் பள்ளி நிறுவனங்களிலும் கட்டணம் கட்டாயம் உயரும்.


 

 
வாகனங்களுக்கான வரி வசூல் மாநில அரசுக்கும், இதர கட்டணங்களின் வசூல் மத்திய அரசிடமும் வழங்கப்படுகிறது. 10 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் அளிக்கப்படும் சேவைகளுக்கான கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. 
 
ஓட்டுநர் பழகுநர் உரிமம், ஓட்டுநர் உரிமம், வாகன உரிமம் புதுப்பிப்பு, முகவரி மாற்றம், வாகன பதிவு, பயிற்சி பள்ளி தொடங்குதல் மற்றும் புதுப்பித்தல் உட்பட 13 சேவைகளுக்கான கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. அனைத்து சேவைகளுக்கான கட்டணத்தையும் சுமார் 40 சதவீதம் உயர்த்தியுள்ளனர்.
 
இதற்கான உத்தரவை மத்திய அரசு கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. இந்த கட்டன உயர்வு இன்றுமுதல் அமலுக்கு வந்துள்ளது. இதனால் ஓட்டுநர் பள்ளி நிறுவனங்கள் அவர்கள் விருப்பத்திற்கு கட்டணங்களை உயர்த்துவார்கள் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.
 
தற்போது அதிகபட்சமாக கார் ஓட்டுநர் பயிற்சிக்கு ரூ.6000 வரை வசூலிக்கப்படுகிறது. ஓட்டுநர் உரிமத்திற்கான கட்டணம் சுமார் 40 சதவீதம் வரை உயர்ந்துள்ளதை அடுத்து பயிற்சி கட்டணம் 50 முதல் 60 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மோடி ஒரு பிக்பாக்கெட்: கடுமையாய் தாக்கும் மார்க்சிஸ்ட்!!