Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரூ.500 கொடுத்தால் ஜெயில் வாழ்க்கையை அனுபவிக்கலாம்: அரசு அறிவிப்பு

ரூ.500 கொடுத்தால் ஜெயில் வாழ்க்கையை அனுபவிக்கலாம்: அரசு அறிவிப்பு
, வியாழன், 25 ஆகஸ்ட் 2016 (17:02 IST)
ஜெயிலுக்கு போக ஆசைப்படுபவர்கள் இனி குற்றம் செய்ய வேண்டிய அவசியமில்லை, ரூ.500 கொடுத்தால் போதும் என்று தெலங்கானா அரசு தெரிவித்துள்ளது.


 

 
ஜெயிலுக்கு சென்று அதை பார்க்க வேண்டும் என்று எல்லோருக்கும் ஆசை இருக்கும். அப்படியானவர்களுக்கு தெலங்கானா அரசு ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
 
தெலங்கானா மாநிலம் மேடக் மாவட்டத்தில் உள்ள சங்க ரெட்டி என்னும் பகுதியில் மிகப்பழமையான சிறை வாளாகம் ஒன்று உள்ளது. இது சுதந்திரப் போராட்ட காலத்தில் போராடியவர்கள் அடைக்கப்பட்ட சிறை.
 
இந்த ஜெயிலில் ஒருநாள் முழுக்க இருந்து ஜெயில் வாழ்க்கையை அனுபவிக்க ஒரு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரூ.500 கட்டணம் செலுத்தினால் போதும் ஒருநாள் முழுவதும் ஜெயிலில் இருக்கலாம்.
 
இதற்கு முன்பதிவு செய்ய வேண்டும். நீங்கள் ஜெயிலுக்குள் சென்றவுடன் கைதிகளை போலவே சிறையில் அடைத்து விடுவார்கள். கைதிகளுக்கு கொடுக்கப்படுவது போலவே 3 வேலை உணவு கொடுப்பார்கள். 
 
ஜெயில் கைதிகள் அணியும் உடை கொடுக்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் கைதிகளுடன் சேர்ந்து ஏதாவது வேலை செய்யலாம். இப்படி ஜெயில் வாழ்க்கையை அனுபவிக்க இந்தியாவிலே முதல்முறையாக தெலங்கானா அரசு அறிவித்துள்ளது.   

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிங்கப்பூரில் ஓட்டுநர் இல்லாமல் ஓடும் வாடகைக் கார் சேவை தொடக்கம்