Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காரில் சீறிய பவர்ஸ்டார் பவன் கல்யாண்! – வீடியோவால் சர்ச்சை!

Advertiesment
Pawan Kalyan
, ஞாயிறு, 6 நவம்பர் 2022 (11:00 IST)
ஆந்திராவில் அரசு இடித்த வீடுகளை பார்வையிட பவன் கல்யான் காரின் மேல் அமர்ந்து சென்ற சம்பவம் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் சாலை விரிவாக்க பணிகளுக்காக வீடுகள் இடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்கட்சிகள் உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட நடிகர் பவண் கல்யாண் தனது ஆதரவாளர்களுடன் சென்றார். அப்போது அவர் காரின் மேற்கூரையில் அமர்ந்து கொண்டிருக்க, மேலும் பலர் காரை சுற்றி தொங்கியபடி அதிவேகத்தில் பயணித்தனர்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலாகியுள்ள நிலையில் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. சாலை விதிகளை மீறி ஆபத்தான முறையில் பயணித்த பவண் கல்யாண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Edited By Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அடுத்த 2 மணிநேரத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை எச்சரிக்கை