Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தட்டு இல்லாததால் நோயாளிக்கு தரையில் சோறு போட்ட கொடுமை: அரசு மருத்துவமனையின் அவலம்

தட்டு இல்லாததால் நோயாளிக்கு தரையில் சோறு போட்ட கொடுமை: அரசு மருத்துவமனையின் அவலம்
, சனி, 24 செப்டம்பர் 2016 (12:46 IST)
ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ராஞ்சி அரசு மருத்துவமனையில் நேயாளி ஒருவருக்கு தரையில் உணவு போட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

ராஞ்சியில் ராஜேந்திரா மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தேவி என்ற நோயாளி ஒருவருக்கு தட்டு இல்லை எனக்கூறி உணவை தரையில் போட்டு சாப்பிடவைத்ததாக தெரிகிறது. எலும்பு முறிவு சிகிச்சைக்காக சேர்ந்துள்ள அவருக்கு சரியான சிகிச்சையும் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இவர் மிகுந்த வறுமை னிலையில் இருந்ததால் மருத்துவமனை ஊழியர்கள் இவரிடம் அலட்சியமாகவே நடந்துள்ளனர்.

இந்த நிலையில் இவருக்கு மதிய உணவு வேளையில் சாப்பிட தட்டு இல்லை எனக்கூறி உணவை தரையில் போட்டு சப்பிடவைத்துள்ளனர் மருத்து ஊழியர்கள். இது தடர்பான புகைப்படங்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விசாரணை நடத்த மருத்துவமனை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கர்நாடக சட்டசபையில் காவிரி விவாதம் ; கோலம் வரைந்த பெண் அமைச்சர் : வைரல் வீடியோ