Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மர்ம நோயால் 17 பேர் மரணம்! தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்ட காஷ்மீர் கிராமம்!

Prasanth Karthick
வியாழன், 23 ஜனவரி 2025 (10:51 IST)

காஷ்மீரில் உள்ள பதால் கிராமத்தில் மர்மமான முறையில் பலர் இறந்து வருவதால் அந்த கிராமம் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள பதால் என்ற கிராமத்தில் டிசம்பர் மாதத்தில் நடந்த ஒரு விருந்தில் பலர் கலந்து கொண்ட நிலையில் அதில் ஒரு வீட்டை சேர்ந்த சிலருக்கு வாந்தி, மயக்கம் உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் 5 பேர் பலியாகியுள்ளார்கள்.

 

அதன் பின்னர் மற்றொரு குடும்பத்தில் அதே அறிகுறிகளோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் மூன்று பேர் பலியானார்கள். அடுத்தடுத்து அதே அறிகுறிகளுடன் பலர் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பலியாகியுள்ளனர்.

 

இவ்வாறு தொடர்ந்து 17 பேர் இதுவரை பலியாகியுள்ள நிலையில் அவர்களது மரணத்திற்கான காரணத்தை அறிய முடியாமல் அரசு அதிகாரிகள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். இது உணவு ஒவ்வாமையால் ஏற்பட்டதா அல்லது ஏதேனும் தொற்று வியாதியா என கண்டறிய இறந்தவர்களின் உடல் மாதிரிகள் இந்தியாவின் பல்வேறு முன்னணி ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

 

இதில் சரியான ஒரு புரிதல் கிடைக்கும் வரை பாதுகாப்பை நிலப்படுத்த பதால் கிராமத்தை தடை செய்யப்பட்ட பகுதியாக அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதனால் வெளியாட்கள் யாரும் அந்த கிராமத்திற்கு அனுமதி இன்றி செல்லமுடியாது. மேலும் அந்த கிராமத்தில் புழங்கப்படும் தண்ணீர், உணவுப்பொருட்கள் போன்றவற்றையும் அதிகாரிகள் சோதித்து வருகின்றனர்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோமியம் விவகாரம்: ஐஐடி இயக்குனருக்கு ஜோஹோ சி.இ.ஓ ஸ்ரீதர் வேம்பு ஆதரவு..!

இறுதிச்சடங்கிற்கு கூட பணம் இல்லை.. இறந்த அமெரிக்காவில் இறந்த இந்திய மாணவருக்கு குவிந்த நிதி..!

பாலியல் குற்றங்களுக்கு கடுமையான தண்டனை! உடனடி ஒப்புதல் கொடுத்த ஆளுநர்!

மீண்டும் சரியும் பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ், நிஃப்டி நிலவரம்..!

வீட்டிலேயே 9 குழந்தைகளை பெற்ற பெண் மீண்டும் கர்ப்பம்! கலைக்க சொல்லி போராடும் சுகாதாரத்துறை ஊழியர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments