நாடாளுமன்ற இரு அவைகளும் இரண்டாவது நாளாக நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நேற்று முதல் நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில் இதில் எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்சனைகள் குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மேலும் கைகளில் பதாகைகளை ஏந்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கங்களை எழுப்பியதால் நாடாளுமன்றத்தின் இயல்பான நடைமுறை நடைபெறவில்லை.
இந்நிலையில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளி காரணமாக நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகியவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.
பிற்பகல் 2 மணிக்கு இரு அவைகளும் மீண்டும் கூடிய போது விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டி வரி விதிப்பை கண்டித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கமிட்டனர். எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் முழக்கம் தொடர்ந்ததால் நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.