தொடர்ந்து எதிர்கட்சிகள் அமளி; நாடாளுமன்றம் நாளை வரை ஒத்திவைப்பு!

Webdunia
திங்கள், 19 ஜூலை 2021 (16:06 IST)
நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில் எதிர்கட்சிகள் அமளியால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் மக்களவை மற்றும் மாநிலங்களை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. புதிய அமைச்சர்கள் பதவியேற்பிற்கு பிறகு கூட்டப்படும் கூட்டத்தொடர் என்பதால் பிரதமர் மோடி அமைச்சர்கள் பட்டியல் அறிக்கையை வாசிக்க இருந்தார்.

இந்நிலையில் செல்போன் தகவல் திருட்டு விவகாரம் உள்ளிட்டவற்றை குறித்து அமளி எழுப்பிய எதிர்கட்சிகள் பிரதமர் மோடியை பேச விடாமல் குறுக்கீடு செய்ததால் பரபரப்பு எழுந்துள்ளது. இதனால் மதியம் வரை இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது.

மீண்டும் அவை தொடங்கிய நிலையில் செல்போன் வழியாக உளவு பார்த்ததாக வெளியான தகவல் உண்மையில்லை என விளக்கமளித்தும் தொடர் அமளி ஏற்பட்டது. எதிர்கட்சிகள் அவை தலைவர் அருகே சென்று தொடர்ந்து முழக்கங்களை எழுப்பியதால் நாளை காலை 11 மணி வரை இரு அவைகளும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்காளர் பட்டியல் திருத்தம் 'மற்றொரு பணமதிப்பிழப்பு': அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா குற்றச்சாட்டு

சவுதி அரேபியா பேருந்து தீப்பிடித்து விபத்து.. 45 பேர் பலி.. ஒருவர் மட்டும் உயிர் தப்பிய அதிசயம்..!

மரண தண்டனை குற்றவாளி ஷேக் ஹசீனாவை ஒப்படையுங்கள்.. இந்தியாவுக்கு வங்கதேசம் கடிதம்..!

சென்னை புறநகரில் இன்றிரவு முதல் மழை தீவிரமடையும்: தமிழ்நாடு வெதர்மேன்

அரசியலுக்கு வருகிறாரா பிரியங்கா காந்தியின் மகன்? ராபர்ட் வதேரா விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments