Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மதுவுக்கு அடிமையான மகனை திருத்த பெற்றோர் எடுத்த முடிவு...

Advertiesment
மதுவுக்கு அடிமையான மகனை திருத்த பெற்றோர் எடுத்த   முடிவு...
, திங்கள், 29 ஜூலை 2019 (19:18 IST)
பஞ்சாப் மாநிலம் பிரோஜ்புர் மாவட்டத்தில் ஜஸ்பீர் சிங்(35) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். 
இந்நிலையில் இவர் பல ஆண்டுகளாகவே குடி  பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளதாகத் தெரிகிறது.   இப்பழக்கத்தை அவரால் விட முடியாமல் தற்கொலை செய்யவும் பலமுறை முயற்சிசெய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
 
அதன்பின்னர், அவரது பெற்றோர் அவரைக் காப்பாற்றி நல்ல  சிகிச்சை அளித்து வந்தனர்.  ஆனாலும் இவரால் குறிப்பிட்ட நேரத்தில் தினமும் மதுகுடிக்காமல் இருக்க முடியாது போகவே அவரால் அவரது எண்ணத்தையும், மனதையும் கட்டுப்படுத்த முடியவில்லை.
 
ஒருகட்டத்தில் ஜஸ்பீர்சிங்கின் தந்தை, மகனை இப்படியே விட்டால் திருத்த முடியாது என்று அவரை வீட்டில் கட்டி வைத்துவிட்டார்.தற்போது இதுவே தொடர்ந்து வருகிறது. கட்டிவைத்திருக்கும் போது ஜஸ்பீர் சிங்கால் மதுவை குடிக்க முடியாது என்பதால் வீட்டில் உள்ளவர்கள் இதனை ஓப்புக்கொண்டுள்ளனர். நம் தமிழகத்தை போன்று பஞ்சாப்பிலும் மதுவிலக்கு இல்லை என்பதால் பலரும் மதுவுக்கு அடிமையாகிவருகின்றனர். இதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
 
இதுபோல் கட்டி வைத்தால் மகன் மதுப்பழக்கத்தை மறந்துவிடுவார் என்று இந்த முயற்சியை கையில் எடுத்துள்ளார். மேலும், இதேபோல் இப்பகுதியில் பல பேர் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளனர். அதற்கு காரணமாக உள்ள மதுக்கடைகளை அகற்ற வேண்டும், அவர்களும் அதில் இருந்து வெளிவர வேண்டும் அதற்கு காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புலிகள் எண்ணிக்கை இந்தியாவில் 33 சதவீதம் அதிகரிப்பு - தமிழ்நாட்டில் எத்தனை உள்ளன?