2,000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்ய 'பான்' எண் கட்டாயம்: ரிசர்வ் வங்கி கவர்னர்

Webdunia
செவ்வாய், 23 மே 2023 (10:26 IST)
2000 ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதற்கு எந்தவித நிபந்தனமும் இல்லை என கூறப்பட்ட நிலையில் தற்போது 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் 2000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்தால் பான் எண் கட்டாயம் என கூறப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
சமீபத்தில் இந்திய ரிசர்வ் வங்கி 2000 ரூபாய் நோட்டை திரும்பத் தருவதாக அறிவித்த நிலையில் 2000 ரூபாய் நோட்டை இன்று முதல் வங்கிகளில் கொடுத்து திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
மேலும் 2000 ரூபாய் நோட்டை வங்கியில் வங்கி கணக்கில் டெபாசிட் செய்யலாம் என்றும் பிக்சட் டெபாசிட் உள்ளிட்ட திட்டங்களிலும் டெபாசிட் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. 
 
இந்த நிலையில் தற்போது வெளியான தகவலின்படி, 50 ஆயிரத்துக்கு மேல் 2000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்தால் அதற்கு பான் எண் கட்டாயம் என ரிசர்வ் வங்கியின் தலைவர் சக்தி காந்த தாஸ்  தெரிவித்துள்ளார். ஐம்பதாயிரம் ரூபாய்க்கு குறைவாக டெபாசிட் செய்தால் பான் எண் கட்டாயம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக தங்கத்தையே கொடுத்தாலும் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்: செல்லூர் ராஜு

இருமுடி கட்டி போவாங்க! விஜய் ரசிகர் செய்த செயலால் கடுப்பான நெட்டிசன்கள்

கொல்கத்தா நிகழ்வின்போது ஏற்பட்ட குழப்பம்.. மெஸ்ஸியிடம் மம்தா பானர்ஜி வருத்தம்!

யூடியூபர் சவுக்கு சங்கர் மீண்டும் கைது: வீட்டின் கதவை உடைத்து கைது செய்ததாக தகவல்..!

கொல்கத்தா சால்ட் லேக் மைதானத்தில் மெஸ்ஸி ரசிகர்கள் ரகளை: ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments