வங்கிக் கணக்குகளை இயக்குவதற்கு பான் எண்கள் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது முதலே ஏராளமான அறிவிப்புகளை மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் வெளியிட்டு வருகிறது.
ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவிக்கப்பட்ட நவம்பர் 8 தேதிக்கு பின்னர் ரூ.2 லட்சத்துக்கும் அதிகமாக டெபாசிட் செய்திருந்தால் அந்த பணத்தை எடுக்க பான் எண் கட்டாயம் தர வேண்டும். இல்லை எனில் படிவம் 60 தர வேண்டும்.
இவ்வாறு இரண்டையும் தரவில்லை எனில் பணத்தை எடுக்க முடியாது. அதேபோல் ரூ.5 லட்சத்துக்கும் மேல் வங்கிக் கணக்கில் பணம் வைத்திருந்தால் பான் எண் கட்டாயம் தேவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.