உலகில் அசைவ உணவை தடை செய்த முதல் நகரம்.. அதுவும் இந்தியாவில்..!
, வியாழன், 22 மே 2025 (10:20 IST)
இந்தியா முழுவதும் சைவ உணவு வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. மேற்கு வங்கத்தின் கிழக்குப் பகுதியிலிருந்தும் குஜராத்தின் மேற்கு பகுதியிலிருந்தும் மக்கள் சைவ உணவையே பெரிதும் விரும்பி உண்ணுகின்றனர். உலகில் மிகவும் அதிக சைவ மக்கள் உள்ள நாடாகவும் இந்தியா திகழ்கிறது.
இருப்பினும், இங்கு அசைவ உணவையும் பலரும் விரும்பி உண்ணுகின்றனர். Statista அறிக்கையின்படி, 2025-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் இறைச்சி சந்தை மதிப்பு $35.87 பில்லியன் அமெரிக்க டாலராக வளரும் என கணிக்கப்படுகிறது.
இத்தகைய நிலையில், நாட்டில் அசைவ உணவுக்கு முழுமையாக தடை விதிக்கப்பட்ட முதல் நகரமாக குஜராத் மாநிலத்தின் பவுநகர் மாவட்டத்தில் உள்ள பளிதானா நகரம் திகழ்கிறது. இந்த நகரில் உள்ள 200-க்கும் மேற்பட்ட ஜைன சன்னியாசிகள் உண்ணா விரதம் இருந்து 250 இறைச்சிக்கடைகளை மூட கோரினர். இதையடுத்து, ஜைன சமுதாயத்தின் உணர்வுகளை மதித்து மாநில அரசு அசைவ உணவுக்கு முழு தடை விதித்தது.
இந்தத் தடை பளிதானாவின் புனிதத்தன்மையை மேலும் வலுப்படுத்தியுள்ளது. இங்கு சைவ உணவகம், ஜைன கோவில்கள் மற்றும் கலாச்சார முக்கியத்துவம் ஆகியவை சுற்றுலா வர்த்தகத்தையும் ஊக்குவிக்கின்றன. பளிதானா, 800-க்கும் மேற்பட்ட ஜைன கோவில்கள் கொண்ட ஷத்ருஞ்ஜயா மலைக்கு புகழ்பெற்ற புனித ஊராக உள்ளது. இந்தியாவில் மட்டுமின்றி அசைவத்தை தடை செய்த உலகின் முதல் நகரம் என்ற பெயரையும் பளிதானா பெற்றுள்ளது.
அடுத்த கட்டுரையில்