Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரஃபேல் விமானம் தாக்கியதாக வரும் செய்தி கட்டுக்கதை: இந்திய ராணுவம் விளக்கம்..!

Advertiesment
Rafael

Siva

, புதன், 14 மே 2025 (07:49 IST)
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் அருகே இந்திய ரஃபேல் போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக பாகிஸ்தான் ஊடகங்கள் மற்றும் சில பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் சமூக ஊடகங்களில் தவறான தகவலை பரப்பி வருவதாகவும் அவை அனைத்தும் கட்டுக்கதை என்றும் இந்திய பாதுகாப்புத் துறை உயரதிகாரி தெரிவித்துள்ளார்.
 
அவர் மேலும் கூறியதாவது: ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற இராணுவ நடவடிக்கையில் இந்திய ரஃபேல் விமானங்கள் பங்கேற்றது உண்மைதான். ஆனால், அந்த நடவடிக்கையிலிருந்தும் பிறகு அனைத்துப் போர் விமானங்களும் பாதுகாப்பாக தங்களது படைத்தளங்களுக்கு திரும்பியுள்ளன. ஒரு விமானமும் சுட்டு வீழ்த்தப்படவில்லை.  
 
இந்தியப் படைகளின் நம்பிக்கையைக் குலைப்பதற்காகவே பாகிஸ்தான், சமூக ஊடகங்களில் தவறான தகவல்களை பரப்பி வருகிறது. மேலும், உண்மை ஆதாரங்கள் இல்லாமலே, சமூக ஊடகங்களில் பிரபலமுள்ள சிலரின் பதிவுகளை ஆதாரமாக காட்டி, பாகிஸ்தானின் பாதுகாப்புத் துறை அமைச்சர் பேட்டி அளித்தது ஆச்சரியமளிக்கிறது.
 
ஒரு விமானம் விழுந்தால் அதன் சான்றுகளாக இடிபாடுகள், ராடார் தரவுகள், பைலட் தகவல்கள் போன்றவை வழங்கப்பட வேண்டும். ஆனால், இங்கே அவை எதுவும் இல்லை. செயற்கை நுண்ணறிவில் உருவாக்கப்பட்ட போலி படங்களை வைத்து திரித்த தகவல்களை பாகிஸ்தான் பரப்பி வருகிறது.
 
இந்த போலியான செய்திகளை நம்ப வேண்டாம் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் ஏர்டெல் சேவை பாதிப்பு.. பயனர்கள் அதிருப்தி..!