Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மிரட்டல் கடிதத்துடன் தூது வந்த புறா: பாகிஸ்தான் டூ இந்தியா

Webdunia
திங்கள், 3 அக்டோபர் 2016 (14:39 IST)
பாகிஸ்தானில் இருந்து மோடிக்கு எச்சரிக்கை விடுத்து எழுதப்பட்ட மிரட்டல் கடிதத்துடன் வந்த புறா சிக்கியது.


 

 
பாகிஸ்தானில் இருந்து பிரதமர் மோடிக்கு மிரட்டல் கடிதம் எடுத்து வந்த புறா சிக்கியது.
 
இந்திய ராணுவம் கடந்த புதன்கிழமை நள்ளிரவு பாகிஸ்தான் எல்லைக்குள் ஊடுருவி பயங்கரவாதிகள் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி 38 பேரை கொன்றது. அதைத்தொடர்ந்து பாகிஸ்தான் இந்தியாவை அச்சுறுத்தும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.
 
இந்நிலையில், பஞ்சாப் மாநிலம் பதன்கோட் அருகே பாகிஸ்தான் எல்லையில் இருந்து பறந்து வந்த சாம்பல் நிற புறா ஒன்று எல்லை பாதுகாப்பு படையினரிடம் நேற்று சிக்கியது. 
 
அந்த புறா பாகிஸ்தானில் இருந்து தூது வந்தது. அதன் கால்களில் உருது மொழியில் எழுதப்பட்ட கடிதம் இருந்தது. அந்த கடிதத்தை படித்த வீரர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
அந்த கடிதத்தில், 1971-ம் ஆண்டு இருந்தவர்களைப் போல் எங்களை மோடி எண்ண வேண்டாம். தற்போதுள்ள நாட்டில் ஒவ்வொரு சிறுவனும், இந்தியாவுக்கு எதிராக போரிட தயாராக இருக்கிறான் என்று எழுதப்பட்டு இருந்தது.
 
இதுகுறித்து பதன்கோட் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உண்மை முகத்தை காட்டுகிறது கர்நாடகா.. வழக்கம்போல் வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு.. ராமதாஸ் கண்டனம்..!

காலி மது பாட்டில்களை திரும்பப் பெறுவது எப்போது? நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் தகவல்..!

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டாம்.! உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாண பத்திரம்..!!

இறப்பிலும் அரசியல் ஆதாயம் தேடும் இபிஎஸ்.! விழுப்புரம் உயிரிழப்பு கள்ளச் சாராயத்தால் நிகழவில்லை.! அமைச்சர் ரகுபதி மறுப்பு.!!

பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் இந்தியா சாதனை.! பிரதமர் மோடி பாராட்டு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments