Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விமானி அபிநந்தன் நாளை விடுவிப்பு – உறுதியளித்தார் பாகிஸ்தான் பிரதமர் !

Webdunia
வியாழன், 28 பிப்ரவரி 2019 (16:45 IST)
பாகிஸ்தானிடம் போர்க்கைதியாக சிக்கியுள்ள அபிநந்தன் நாளை எந்தவித நிபந்தனையுமின்றி விடுவிக்கப்படுவார் என பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.

கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி நடந்த புல்வாமாத் தாக்குதலுக்குப் பதிலடிக் கொடுக்கும் விதமாக நேற்று முன்தினம் இந்தியா எல்லைத் தாண்டி பாகிஸ்தானின் பாலகோட் எனும் பகுதியில் நடத்தியது. அந்தத் தாக்குதலுக்குப் பதிலடிக் கொடுக்கும் விதமாக நேற்று பாகிஸ்தான் விமானங்கள் எல்லைத் தாண்டி இந்தியாவில் தாக்குதல் நடத்த முயன்றுள்ளது. ஆனால் இந்திய விமானப்படை அந்த விமானங்களை சுட்டு வீழ்த்தியுள்ளது. அதில் ஒரு விமானம் தவிர மற்ற இரண்டு விமானங்களும் தப்பி சென்று விட்டதாகக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலின் போது இந்திய விமானி ஒருவர் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிக்கொண்டார்.

இதையடுத்து அவர் பாகிஸ்தான் ராணுவத்திடம் விமானி அபிநந்தன் சிக்கியுள்ள வீடியோக் காட்சிகள் வெளியாகி பரபரப்பைக் கிளப்பின. பாகிஸ்தானிடம் இருந்து அபிநந்தனை மீட்க இந்திய அரசு நடவடிக்கைகளில் ஈடுபட்டது. பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகம் மூலமாகவும் மற்றும் உலக நாடுகளான அமெரிக்கா மற்றும் ஜெர்மன் மூலமாக பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுத்தது.

இதனையடுத்து விமானி அபிநந்தனை விடுவிக்க பாகிஸ்தான் அரசு ஒத்துக்கொண்டுள்ளதாக தகவல்கள் காலையில் வெளியாகியாகின. அதையடுத்து நாளை அவர் விடுவிக்கப்படுவார் என்ற தகவலை இப்போது பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். இந்த திடீர் முடிவுக்கு இந்தியா உலக நாடுகள் மூலம் கொடுத்த அழுத்தமும் ஒருக் காரணம் என்று கூறப்படுகிறது. பாகிஸ்தான் அரசு அபிநந்தனை எந்தவித நிபந்தனையுமின்றி விடுதலை செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விடுதலையை அடுத்து இந்தியா பாகிஸ்தானுக்கிடையில் அமைதிப் பேச்சுவார்த்தைகள் தொடங்குவதற்கான சாத்தியக் கூறுகள் தெரிய ஆரம்பித்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

’வணக்கம் சோழ மண்டலம்’.. சிவனை வழிபடுபவன் சிவனில் கரைகிறான்! - பிரதமர் மோடி பேச்சு!

ஓலைச்சுவடி படிக்கும் தஞ்சை மணிமாறன்! - மன் கீ பாத்தில் புகழ்ந்து வாழ்த்திய பிரதமர் மோடி!

துணை முதலமைச்சர் பதவி! ஆசைக்காட்டினால் சென்று விடுவேனா? - திருமாவளவன் பரபரப்பு பேச்சு!

நாளை மறுநாள் சபரிமலை ஐயப்பன் கோவில் திறப்பு.. நிறைபுத்தரிசி பூஜை தேதியும் அறிவிப்பு..!

கல்லூரி மாணவர்கள் விடுதியில் 5000 கஞ்சா சாக்லேட்டுக்கள்.. சென்னை அருகே அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments