ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படுவதாக வெளியான அறிவிப்பை பாகிஸ்தான் கடுமையாக எதிர்த்தது. அதேபோல், இந்தியா மீது தாக்குதல் நடத்தவும் திட்டமிட்டது.
குறிப்பாக காஷ்மீரின் பூஞ்ச் உள்ளிட்ட பகுதியில் பாகிஸ்தான் அத்துமீறல் சம்பவம் அதிகரித்து காணப்படுகிறது. மேலும், பயங்கரவாதிகளை தூண்டிவிட்டு எல்லைப்பகுதியில் அமைதியை சீர்குலைக்கவும் பாகிஸ்தன சதி திட்டம் தீட்டியது.
ஆனால், இந்த ராணுவம் பாகிஸ்தான் ஊடுருவ முடியாத வகையில் பாதுகாத்து வருகிறது. அதோடு இந்திய ராணுவம் மிக சாதுர்யமாக செயல்பட்டு பாகிஸ்தானின் சதி திட்டத்தை வெளிப்படையா போட்டுடைத்துள்ளது.
இதனை மீறியும் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தும் பட்சத்தில் வெளிப்படையாகவே இந்தியாவும் தயங்காமல் பதிலடி கொடுக்கும் என தெரிகிறது.