Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிந்து நதிநீரை நிறுத்தினால் இந்தியா மீது அணுகுண்டு வீசப்படும்: பாகிஸ்தான் அமைச்சர்...!

Siva
ஞாயிறு, 27 ஏப்ரல் 2025 (16:19 IST)
சிந்து நதி நீரை நிறுத்தினால் இந்தியா மீது அணுகுண்டு வீசுவோம் என்றும், இந்தியா ஒரு போருக்கு தயாராக வேண்டும் என்றும் பாகிஸ்தான் அமைச்சர் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
பெஹல்காம் தாக்குதலை அடுத்து, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்த நிலையில், பாகிஸ்தான் அமைச்சர் ஹனிப் அப்பாஸி என்பவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
 
’எங்களுக்கு தண்ணீர் வழங்குவதை நிறுத்தினால், இந்தியா போருக்கு தயாராக வேண்டும்’ என்றும், ’எங்களிடம் உள்ள இராணுவ உபகரணங்கள், ஏவுகணைகள் போன்றவை காட்சிக்கு வைக்கப்படவில்லை’ என்றும், ’பாகிஸ்தானுக்கு நீரை நிறுத்தினால் இந்தியா மீது ஏவுவதற்காக 130 அணுகுண்டுகளை வைத்துள்ளோம்’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
’இந்தியாவை தாக்குவதற்காகவே நாங்கள் அணுகுண்டுகளை வைத்துள்ளோம். இந்த நிலைமை தொடர்ந்தால், இந்தியாவில் உள்ள விமான நிறுவனங்கள் திவாலாக விடும்’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
பாகிஸ்தான் அமைச்சரின் இந்த பேச்சு, உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நிலத்தகராறு: பெற்ற தாய் - தந்தையை டிராக்டர் ஏற்றி கொடூரமாக கொன்ற மகன்!

பெஹல்காம் தாக்குதலில் பலியானாரின் வீட்டிற்கு சென்ற கேரள முதல்வர்.. நேரில் ஆறுதல்..!

விஜய்யை யாரும் கூட்டணிக்கு அழைக்கவில்லை.. தனித்து புலம்புகிறார்: அமைச்சர் கோவி.செழியன்

தமிழக கடல் பகுதியில் எரிவாயு எடுக்க ONGCக்கு அனுமதி! - அதிர்ச்சியில் மீனவர்கள். இயற்கை ஆர்வலர்கள்!

இந்தியாவிலேயே செத்தாலும் பரவாயில்லை.. வெளியேற மறுக்கும் 79 வயது பாகிஸ்தான் முதியவர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments