Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவால் பாகிஸ்தானுக்கு அதிக சேதம்.. பாகிஸ்தானால் இந்தியாவுக்கு எந்த சேதமும் இல்லை: அமெரிக்க பத்திரிகை

Siva
வியாழன், 15 மே 2025 (07:45 IST)
காஷ்மீரில் உள்ள பகல்காம் தாக்குதலுக்கு பிறகு இந்தியா பாகிஸ்தான இடையே போர்ச் சூழல் ஏற்பட்டது என்பதும், இரு நாடுகளும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர் என்பதும் தெரிந்தது.
 
இந்தத் தாக்குதலில் பாகிஸ்தானுக்கு அதிக சேதம் ஏற்பட்டதாகவும், இந்தியாவுக்கு எந்தப் பெரிய சேதமும் இல்லை என்றும் அமெரிக்கப் பத்திரிக்கை செய்தி வெளியிட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
பாகிஸ்தானில் உள்ள அணு உலை அருகே இந்தியா தாக்குதல் நடத்தியதால் பெருத்த சேதம் ஏற்பட்டிருக்கிறது என்றும், பாகிஸ்தானில் உள்ள பல ராணுவத் தளவாடங்கள் இந்தியாவால் தாக்கப்பட்டன என்றும் அந்தப் பத்திரிக்கை குறிப்பிட்டுள்ளது.
 
ஆனால் அதே நேரத்தில், இந்தியாவின் ரபேல் உள்ளிட்ட சில ஏவுகணைகளை பாகிஸ்தான் தாக்கியதாக கூறியது அனைத்தும் ஆதாரமற்றவை என்றும், இந்தியாவுக்கு எந்தப் பெரிய சேதமும் இந்த மோதலில் இல்லை என்றும் தெரிவித்துள்ளது. 
 
இதனால், பாகிஸ்தான் பிரதமர் உள்பட பாகிஸ்தான் ராணுவம் அதிகாரிகள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பரவிய, இந்தியாவுக்குச் சேதம் என்ற செய்திகள் அனைத்தும் பொய் என்பது நிறுவப்பட்டுள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பலுசிஸ்தான் தான் இனி எங்கள் நாடு, பாகிஸ்தானில் இருந்து பிரிந்துவிட்டோம்.. அதிர்ச்சி அறிவிப்பு..!

ஆகமம் இல்லாத கோயில்களை அடையாளம் காண வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 10 காசுகள் உயர்வு.. இன்னும் உயர வாய்ப்பு..!

6000 ஊழியர்களை திடீரென வேலைநீக்கம் செய்த மைக்ரோசாப்ட்.. ஏஐ காரணமா?

அதிபர் டிரம்ப்பை திடீரென சந்தித்த முகேஷ் அம்பானி! என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments