இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் மூளும்படியான சூழல் உள்ள நிலையில் இந்திய ராணுவத்தின் சில வலைதளங்கள் மீது சைபர் தாக்குதல் நடந்துள்ளதாக வெளியாகியுள்ள செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஷ்மீரில் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலின் எதிரொலியாக இந்திய அரசும், பாகிஸ்தான் அரசும் எல்லைகளை மூடிய நிலையில், தடைகளும் விதிக்கப்பட்டது. தொடர்ந்து இரு நாடுகளிடையே போர் மூளும் சூழல் நிலவி வரும் நிலையில் ராணுவம் போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.
சமீபத்தில் இந்திய அரசு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள், அரசியல்வாதிகளின் சமூக வலைதள கணக்குகளை இந்தியாவில் முடக்கியது.
இந்நிலையில் தற்போது இந்திய ராணுவ வலைதளம் மீது சைபர் தாக்குதல் நடந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்திய ராணுவ வாகணங்களுக்கான இணையதளம் மீது பாகிஸ்தானில் இருந்து ஹேக்கிங் சம்பவம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
இதுதவிர ராணுவம் தொடர்பான வேறு சில வலைதளங்களும், பாரிக்கர் பாதுகாப்பு கல்வி நிறுவன இணையதளமும் பாகிஸ்தான் ஹேக்கர்களால் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. இதுகுறித்து ஆய்வுகள் நடந்து வருவதாக இந்திய ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Edit by Prasanth.K