Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அபிநந்தன் விரைவில் விடுவிப்பு – ஒத்துக்கொண்டது பாகிஸ்தான் !

Webdunia
வியாழன், 28 பிப்ரவரி 2019 (14:00 IST)
பாகிஸ்தானிடம் சிக்கியுள்ள இந்திய விமானி அபிநந்தன் விரைவில் விடுவிக்கப்படுவார் என பாகிஸ்தான் அரசு ஒத்துக்கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி புல்வாமாத் தாக்குதலுக்குப் பதிலடிக் கொடுக்கும் விதமாக நேற்று இந்தியா எல்லைத் தாண்டி பாகிஸ்தானின் பாலகோட் எனும் பகுதியில் நடத்தியது. அந்தத் தாக்குதலுக்குப் பதிலடிக் கொடுக்கும் விதமாக இன்று பாகிஸ்தான் விமானங்கள் எல்லைத் தாண்டி இந்தியாவில் தாக்குதல் நடத்த முயன்றுள்ளது.

ஆனால் இந்திய விமானப்படை அந்த விமானங்களை சுட்டு வீழ்த்தியுள்ளது. அதில் ஒரு விமானம் தவிர மற்ற இரண்டு விமானங்களும் தப்பி சென்று விட்டதாகக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலின் போது இந்திய விமானி ஒருவர் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிக்கொண்டார்.

இதையடுத்து அவர் பாகிஸ்தான் ராணுவத்திடம் விமானி அபிநந்தன் சிக்கியுள்ள வீடியோக் காட்சிகள் வெளியாகி பரபரப்பைக் கிளப்பின. பாகிஸ்தானிடம் இருந்து அபிநந்தனை மீட்க இந்திய அரசு நடவடிக்கைகளில் ஈடுபட்டது. பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகம் மூலமாகவும் மற்றும் உலக நாடுகளான அமெரிக்கா மற்றும் ஜெர்மன் மூலமாக பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுத்தது.

இதனையடுத்து விமானி அபிநந்தனை விடுவிக்க பாகிஸ்தான் அரசு ஒத்துக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அவரை எப்போது எப்படி விடுவிக்கும் போன்ற விவரங்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments