Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பத்மாவதி, முத்தலாக் குறித்த கேள்விகள்; சர்ச்சையை ஏற்படுத்திய தேர்வு தாள்

Webdunia
திங்கள், 11 டிசம்பர் 2017 (13:12 IST)
பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. வரளாற்று தேர்வு கேள்வி தாளில் பத்மாவதி, முத்தலாக குறித்த கேள்விகள் கேட்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
பனராஸ் இந்து பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. வரலாற்று தேர்வு தாளில் பத்மாவதி, முத்தலாக் உள்ளிட்ட கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. ஜோஹர் பாரம்பரியம் என்ன சொல்கிறது? அலவுதீன் கில்ஜி காலத்தில், ராணி பத்மாவதியின் ஜோஹர் குறித்து விவரிக்கவும் என கேள்விகளை கேட்கப்பட்டுள்ளது. 
 
சர்ச்சைக்குரிய முத்தலாக் குறித்த கேள்வியும் இடம்பெற்றுள்ளது. மத்திய கால இந்தியாவில் சமூகம் மற்றும் கலாச்சாரம் குறித்த கேள்விகளும் சுல்தானிய ஆட்சியில் முஸ்லிம் பெண்களின் நிலை குறித்த கேள்வியும் கேட்கப்பட்டுள்ளது. 
 
இதுகுறித்து இடைக்கால வரலாற்று துறையின் உதவி பேராசிரியர் ராஜீவ் ஸ்ரீவாஸ்தா கூறியதாவது:-
 
நீங்கள் இடைக்கால வரலாறு மற்றும் இஸ்லாமிய வரலாற்றை கற்றுக்கொள்வதன் மூலம் தானாகவே பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக மாறும் என கூறியுள்ளார். மேலும் இதுபோன்ற கேள்விகள் கேட்கப்பட்டது சரிதான் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments