Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீதி 16.4 லட்சம் கோடி எங்கே? நிதியமைச்சருக்கு ப சிதம்பரம் கேள்வி!

Webdunia
வியாழன், 14 மே 2020 (08:29 IST)
நேற்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்புகளை வெளியிட்டுள்ள நிலையில் ப சிதம்பரம் அதன் மீதான விமர்சனத்தை வைத்துள்ளார்.

பிரதமர் மோடி நேற்று இரவு கூறிய  ரூ.20 லட்சம்  கோடி  திட்ட  அறிவிப்புகள் இன்று மாலை 4 மணிக்கு வெளியிடுவதாக தகவல் வெளியான நிலையில் இது குறித்த விவரங்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து நாடு முழுவதும் பெருத்த விமர்சனங்களும் பாராட்டுகளும் எழுந்த வண்ணம் உள்ளன.

அவரது அறிவிப்பில் சிறு தொழில் நிறுவனங்களுக்கு அடமானம் இல்லாமல் 3.4லட்சம் கோடி கடன் வழங்கப்படும் என அறிவித்திருந்தார். அதைத் தவிர ஏழை மக்களுக்குப் பயன்படும் வகையில் எந்தவொரு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படவில்லை என அறிவித்துள்ளார் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான ப சிதம்பரம்.

இதுகுறித்து விடியோ கான்பரன்ஸ் மூலமாக செய்தியாளர்களை சந்தித்த அவர் ‘லட்சக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பசி, பட்டினியுடன் நடந்து சென்றனர். அவர்களுக்காக இந்த நிதித் தொகுப்பில் எதுவும் இல்லை. ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.5,000 வழங்கினால் அரசுக்கு ரூ.65,000 கோடி மட்டுமே செலவாகும். 13 கோடி குடும்பங்களின் கையில் பணத்தைக் கொடுப்பதே அரசாங்கம் செய்ய வேண்டியதாகும்.

அரசு என்றால் அதிக செலவு செய்து அதிக கடன் வாங்க வேண்டும் ஆனால், அவ்வாறு செய்ய தயாராக இல்லை. அதிக கடன் வாங்கவும் அதிக செலவு செய்யவும் மாநிலங்களை அனுமதிக்க வேண்டும். அதற்கும் தயாராக இல்லை’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விதிகளை மீறி போராட்டம் நடத்துகிறது திமுக.. சென்னை ஐகோர்ட்டில் பாமக மனு..!

திபெத் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆக உயர்வு.. அதிர்ச்சி தகவல்..!

மக்கள் பிரச்சினைய பேசுங்க.. மத்தவங்கள விமர்சித்து பேச வேண்டாம்! - தொண்டர்களுக்கு விஜய் உத்தரவு!

கும்பமேளா ஸ்பெஷல்: நெல்லையில் இருந்து காசிக்கு சிறப்பு சுற்றுலா ரயில்

நேற்றைய சரிவுக்கு பின் இன்று சற்றே உயர்ந்த பங்குச்சந்தை.. சென்செக்ஸ், நிஃப்டி நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments