Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவை பங்கம் பண்றாரே ட்ரம்ப்; மறுபடியும் விழா எடுப்பீங்களா? – ப.சிதம்பரம் கேள்வி!

Webdunia
வியாழன், 1 அக்டோபர் 2020 (09:26 IST)
இந்தியாவை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது தேர்தல் பிரச்சாரங்களில் விமர்சிப்பது குறித்து பேசியுள்ள ப.சிதம்பரம் மீண்டும் இந்தியாவில் ட்ரம்புக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்படுமா என கேள்வி எழுப்பியுள்ளார்.

அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தலுக்கான பிரச்சார பணிகள் முழு வேகத்தில் நடைபெற்று வருகின்றனர். இந்நிலையில் சமீப காலமாக பிரச்சாரத்தில் பேசி வரும் அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து இந்தியா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகிறார். இந்தியா கொரோனா பலி எண்ணிக்கையை குறைத்து காட்டுவதாகவும், சுற்றுசூழல் சீர்கேட்டில் இந்தியா முக்கிய பங்கு வகிப்பதாகவும் அவர் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ட்ரம்பின் இந்த சர்ச்சை பேச்சு குறித்து பேசியுள்ள முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் ”கொரோனாவால் உயிரிழந்தவர்கள் விவரங்களை இந்தியா மறைப்பதாக ட்ரம்ப் பேசியுள்ளார். அதிக காற்று மாசு ஏற்படுத்துவதாகவும் இந்தியா மீது குற்றச்சாட்டு வைத்துள்ளார். தனது உற்ற நண்பரை கவுரவிக்க இன்னொரு “நமஸ்தே ட்ரம்ப்” நிகழ்ச்சி நடத்துவாரா மோடி?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிராவில் முட்டாள் அரசாங்கம் நடக்கிறது: ஆதித்ய தாக்கரே கடும் தாக்கு..!

இயக்குநர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல்: பாஜக குற்றச்சாட்டு..!

மோடிக்கு பின்னர் யோகி ஆதித்யநாத் தான் பிரதமரா? அவரே அளித்த தகவல்..!

விளம்பர ஷூட்டிங்கில் வந்து வசனம் பேசினால் மட்டும் போதாது: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments