ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் ஊழல் வழக்கில் அதிரடியாக கைது

Webdunia
புதன், 28 பிப்ரவரி 2018 (09:21 IST)
ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் அந்நிய முதலீடு பெற்ற விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரத்தை சென்னையில் சிபிஐ இன்று அதிரடியாக கைது செய்துள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் அந்நிய முதலீடு பெற்ற விவகாரத்தில் முறைகேடு நடந்ததாக கார்த்திக் சிதம்பரம் உள்பட 5 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இதுதொடர்பாக கார்த்திக்  சிதம்பரத்தை விசாரணைக்கு நேரில் ஆஜராக சிபிஐ உத்தரவிட்டது.
 
ஆனால் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்தவருக்கு உச்சநீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என உத்தரவிட்டது. இந்த வழக்கில் கார்த்தி  சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கரன் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருக்கிறார்.
 
கார்த்தி சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனு உச்சநீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டதையடுத்து, சென்னையில் இன்று சிபிஐ, கார்த்தி சிதம்பரத்தை அதிரடியாக கைது செய்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட 9 சட்ட மசோதாக்களுக்கு அனுமதி.. ஆளுநர் ஆர்.என். ரவி கையெழுத்து..!

ஃபோர்டு நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்: ரூ.3250 கோடி முதலீட்டில் என்ஜின் உற்பத்தி!

சுவாமி தயானந்த சரஸ்வதி நினைவு நிகழ்ச்சி: பிரதமர் மோடி பேச்சு!

டெங்கு மற்றும் மழைக்கால நோய்த்தடுப்பு: சுகாதாரத்துறை தயார்நிலை குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!

மண்டல பூஜை, மகர விளக்கு திருவிழாவை முன்னிட்டு சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள்.. தேதி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments