Webdunia - Bharat's app for daily news and videos

Install App

106 நாட்களுக்கு பின் சிறையில் இருந்து வெளியே வந்தார் ப.சிதம்பரம்

Webdunia
புதன், 4 டிசம்பர் 2019 (20:23 IST)
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியதை அடுத்து, திகார் சிறையிலிருந்து 106 நாட்களுக்கு வெளியே வந்த ப.சிதம்பரம் சற்றுமுன் சுதந்திர காற்றை சுவாசித்தார். திகார் சிறையில் வாசலில் அவரை வரவேற்க நூற்றுக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் திரண்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை ஆகிய இரண்டு அமைப்புகளால் கடந்த ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இதன் பின்னர் பல முறை அவர் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செயத நிலையில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ ஆகியவற்றின் எதிர்ப்பால் நீதிமன்றம் அவரது ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்தது.
 
இந்த நிலையில் கடந்த மாதம் சிபிஐ தாக்கல் செய்த வழக்கில் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் கிடைத்தபோதிலும், அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் ஜாமீன் கிடைக்கவில்லை என்பதால் அவர் சிறையில் இருந்து வெளியே வரமுடியாத நிலை இருந்தது. இந்த நிலையில் இன்று ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் ப.சிதம்பரத்திற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தர்விட்டுள்ளது. இதனையடுத்து சற்றுமுன் 106 நாட்கள் சிறைவாசத்திலிருந்து ப.சிதம்பரம் விடுதலையாகியுள்ளார்.
 
இருப்பினும் அவர் மீதான வழக்கில் அவருக்கு எதிரான தீர்ப்பு வந்தாலும் நிரந்தர சிறைவாசம் என்ற வாய்ப்பும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுகவுக்கு போக மாட்டேன்.. 2026ல் அம்மாவின் ஆட்சி: ஓ பன்னீர்செல்வம்

வன்கொடுமை ஆகக்கூடாதுனா வெளிய வராதீங்க! - அகமதாபாத்தில் சர்ச்சை போஸ்டர்கள்!

மாடுகளுக்கு போராட தெரியவில்லை.. கூரிய கொம்புகள் இருப்பதை மறந்துவிட்டன: சீமான்

அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை.. குடையுடன் வெளியே போங்க..!

கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் விலகியது வருத்தம் அளிக்கிறது: டிடிவி தினகரன்

அடுத்த கட்டுரையில்
Show comments