Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிபிஐ அதிகாரிகளால் ப.சிதம்பரம் கைது! நீதிமன்றத்தில் நாளை ஆஜர்

Advertiesment
சிபிஐ அதிகாரிகளால் ப.சிதம்பரம் கைது! நீதிமன்றத்தில் நாளை ஆஜர்
, புதன், 21 ஆகஸ்ட் 2019 (22:27 IST)
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டார். டெல்லியில் உள்ள ப.சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் கைது செய்து அவரை அவர்களுடைய காரில் அழைத்துச் சென்றனர். ப.சிதம்பரம் உடன் காங்கிரஸ் மூத்த தலைவர்களும் வழக்கறிஞர்களுமான அபிஷேக் மனு சிங்கி மற்றும் கபில் சிபில் உடன் சென்றதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் டெல்லியில் உள்ள ரோஸ் அவின்யூ நீதிமன்றத்தில் நாளை ஆஜர்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டது குறித்து தமிழக பிரபலங்கள் கூறிய கருத்துக்களை தற்போது பார்ப்போம்
 
தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன்: தமிழகத்தைச் சேர்ந்த ஒரு அரசியல்வாதி கைது செய்யப்பட்டிருப்பது தலைகுனிவுதான். கதவு பூட்டப்பட்டிருந்ததால் தான் அதிகாரிகள் சுவர் ஏறி குதித்தனர்; அவர்கள் அவ்வாறு சென்றதற்கு ப.சிதம்பரம் தரப்பே காரணம்
 
விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன்: ப.சிதம்பரம் ஒரு பயங்கரவாதி அல்ல; நாட்டின் உள்துறை, நிதி அமைச்சராக இருந்தவர். ப.சிதம்பரத்திற்கு எதிரான பழிவாங்கும் போக்கை மத்திய பாஜக அரசு கைவிட வேண்டும்
 
கார்த்திக் சிதம்பரம்: ஐ.என்.எக்ஸ் வழக்கில் எதையும் சட்டப்படி சந்திப்போம். எனது தந்தை எங்கும் ஓடி ஒளியவில்லை. அரசியல் காழ்ப்புணர்ச்சியால் வழக்கு ஜோடிக்கப்பட்டு எனது தந்தையை கைது செய்துள்ளனர். மேலும் முழுக்க முழுக்க யாரையோ திருப்திபடுத்த, இந்த கைது நடவடிக்கையை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்
 
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டிருப்பது மிகப்பெரிய ஜனநாயகப் படுகொலை. ப.சிதம்பரம் பொருளாதார குற்றவாளி, தேசவிரோதி போல் உருவகப்படுத்த முயற்சிக்கிறார்கள்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ப.சிதம்பரத்தை அழைத்து சென்ற சிபிஐ அதிகாரிகள்: கைதா? என சற்று நேரத்தில் தெரிய வரும்!