Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆக்ஸ்போர்டு பல்கலையின் தடுப்பூசி: ரூ.1000க்கு இந்தியாவில் கிடைக்குமா?

ஆக்ஸ்போர்டு பல்கலையின் தடுப்பூசி: ரூ.1000க்கு இந்தியாவில் கிடைக்குமா?
, புதன், 22 ஜூலை 2020 (08:02 IST)
கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் தடுப்பூசியை இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்  உருவாக்கி உள்ளதாக வெளிவந்துள்ள செய்தியை அடுத்து இந்த தடுப்பூசி இந்தியாவில் வரும் நவம்பர் மாதத்திற்குள் ரூ.1000 என்ற விலையில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
 
உலகம் முழுவதும் மனித இனத்தையே ஆட்டிப்பட்டைத்து வரும் கொரோனாவை தடுக்க இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் பல்கலை தடுப்பூசி ஒன்றை கண்டுபிடித்துள்ளது. இந்த தடுப்பூசியை இங்கிலாந்தில் மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் முதல்கட்ட சோதனை வெற்றி பெற்றுள்ளதாகதாகவும், இதனால் கொரோனாவை உலகில் இருந்து விரட்டும் காலம் வந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
 
இந்த நிலையில் இந்த தடுப்பூசியை இந்தியாவில் தயாரித்து, 100 கோடி ‘டோஸ்’ வினியோகம் செய்ய இந்திய சீரம் இன்ஸ்டிடியூட் ஒப்பந்தம் செய்திருப்பதாகவும், இதனால் வரும் நவம்பர் மாதத்திற்குள் இந்தியாவில் இந்த தடுப்பூசி ரூ .1,000 விலையில் கிடைக்கும் என்று சீரம் இன்ஸ்டிடியூட் நம்பிக்கை தெரிவித்தூள்ளது.
 
இந்த செய்தியால் கொரோனா பயத்தில் இருக்கும் மக்களுக்கு ஒரு நம்பிக்கை கிடைத்துள்ளது இருப்பினும் இந்த தடுப்பூசி எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்றும் எந்த அளவுக்கு நன்றாக வேலை செய்யும், எத்தனை பேரை பாதுகாக்கும் என்பது போகப்போகத்தான் தெரியும்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எல்.முருகன் சவாலுக்கு பதிலடி கொடுத்த கே.எஸ்.அழகிரி!