Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”டிரம்ப் என்ன வலிமையான மனிதரா?” அமெரிக்க அதிபரின் மீது பாயந்த ஓவைசி

Webdunia
புதன், 21 ஆகஸ்ட் 2019 (09:41 IST)
அமெரிக்க அதிபர் டிரம்ப், காஷ்மீர் பிரச்சனையில் தலையிட என்ன அவசியம்? என, இந்திய மஜ்லீஸ்-ஈ-இத்கதுல் தலைவர் அசாதுதின் ஓவைசி கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு  வந்த சிறப்பு அந்தஸ்து சமீபத்தில் ரத்து செய்யப்பட்டது. மேலும் ஜம்மு காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.

இதை குறித்து பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்புடன் தொலைபேசியில் 30 நிமிடங்கள் உரையாடல் நடத்தியதாக தகவல் வெளியானது. இந்நிலையில் அனைத்து இந்திய மஜ்லீஸ்-ஈ-இத்கதுல் தலைவர் ஓவைசி இது குறித்து அளித்த பேட்டியில், காஷ்மீர் பிரச்சனையில் மத்தியஸ்தம் செய்ய அமெரிக்கா தயார் என்பதை மோடி ஒத்துக்கொண்டுள்ளதாக தெரிகிறது.காஷ்மீர் விவகாரம் இரு நாடுகள் தொடர்புடையது. அதில் மூன்றாவதாக தலையிட டிரம்புக்கு என்ன அவசியம்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், அந்த பேட்டியில், ”காஷ்மீர் விவகாரம் குறித்து பேச டிரம்ப் என்ன சர்வதேச காவலரா? உலகிலேயே மிகவும் வலிமையான மனிதரா? எனவும் கூறியுள்ளார்.

பிரதமர் மோடி தொலைபேசி மூலம் பேசிய போது, “பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நாட்டின் அமைதியை குலைக்கும் வகையில் நடந்து கொள்கிறார்” என டிரம்பிடம் குற்றம் சாட்டியுள்ளதாக ஒரு தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments