Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மக்களவையில் மசோதா நகலை கிழித்தெறிந்த எம்பியால் பரபரப்பு

Webdunia
திங்கள், 9 டிசம்பர் 2019 (21:28 IST)
பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளில் இருந்து  மதபாகுபாட்டால் வெளியேறி இந்தியாவில் குடியேறிய  சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை அளிக்கப்படும் என்று அறிவித்த உள்துறை அமைச்சர் அமித்ஷா இதுகுறித்த மசோதாவை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
 
இந்த மசோதா மக்களவையில் இன்று எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் தாக்கல் செய்யப்பட்டது. பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து குடியேறிய இந்துக்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட 6 மத அகதிகள் குடியுரிமை பெற இந்த மசோதா அனுமதி அளித்துள்ள நிலையில் இதில் இஸ்லாம் இல்லாததை எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டின.
 
இந்த நிலையில் மக்களவையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவின் நகலை இந்திய மஜ்லிஸ்-ஈ-இத்ஹதுல் முஸ்லிமன் கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி கிழித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் ‘இந்த மசோதா அரசியலமைப்புக்கு எதிரானது என்றும், நாட்டை மற்றொரு பிரிவினைக்கு உள்ளாக்கும் நோக்கம் கொண்டது என்றும் ஓவைசி ஆவேசமாக பேசினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments