தொடர்ந்து பெய்து வரும் மழை: 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்

Webdunia
சனி, 29 ஏப்ரல் 2023 (12:50 IST)
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வரும் நிலையில் கேரளாவில் உள்ள சில பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளன 
 
இந்த நிலையில் கேரளாவில் உள்ள மூன்று மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட் விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கையை எடுத்துள்ளது. கேரளாவில் உள்ள எர்ணாகுளம் பாலக்காடு இடுக்கி ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் கன மழை தொடரும் என்பதால் அந்த மாவட்டத்தில் உள்ள நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
 
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் கேரளாவில் உள்ள சில மாவட்டங்களில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருவது மாநில மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

20 ஆண்டுகளாக தேர்தலில் போட்டியிடாமல் முதலமைச்சராகும் நிதிஷ்குமார்.. இந்த முறையும் அப்படித்தான்..!

புலி இன்னமும் சக்தியோடு தான் உள்ளது: நிதிஷ் குமார் இல்ல வாசலில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு!

பிகார் சட்டப்பேரவை தேர்தல்: மண்ணை கவ்விய பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி..!

திமுகவில் இணைந்த மைத்ரேயனுக்கு புதிய பொறுப்பு.. துரைமுருகன் அறிவிப்பு..!

வாரத்தின் கடைசி நாளில் திடீரென சரியும் பங்குச்சந்தை.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments