கேரளாவில் கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த கனமழை காரணமாக மிகப்பெரிய சேதம் ஏற்பட்டது என்பதும் 20க்கும் மேற்பட்டோர் பலியாகினர் என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் தற்போது மீண்டும் கேரளாவுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது பொதுமக்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
இன்று கேரளாவில் உள்ள முக்கிய நகரங்களான திருவனந்தபுரம் கொல்லம் பத்தனம்திட்டா ஆலப்புழா கோட்டயம் மற்றும் இடுக்கி 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதாகவும் இந்த மாவட்டங்களில் வரும் ஞாயிற்றுக்கிழமை வரை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
இதனை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கேரள அரசு தற்போது எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது