சமீபத்தில் பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது என்பதும் இந்த ஆலோசனை கூட்டத்தில் ராகுல் காந்தி, மு க ஸ்டாலின் உள்பட பல முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர் என்பதையும் பார்த்தோம்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் பாஜகவுக்கு எதிராக நாடு முழுவதும் ஒற்றுமையாக வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று கூறப்பட்டதாகவும் தகவல் வெளியாகின.
இந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் அடுத்த கட்ட ஆலோசனைக் கூட்டம் சிம்லாவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்த இடம் மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிம்லாவில் எதிர்க்கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற இருந்த நிலையில் தற்போது அந்த கூட்டம் பெங்களூரில் ஜூலை 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் அறிவித்துள்ளார்.