Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மக்களை வங்கிகளுக்கு அடிமையாக்கும் திட்டம் இது - சீறும் நெட்டிசன்கள்

மக்களை வங்கிகளுக்கு அடிமையாக்கும் திட்டம் இது - சீறும் நெட்டிசன்கள்

மக்களை வங்கிகளுக்கு அடிமையாக்கும் திட்டம் இது - சீறும் நெட்டிசன்கள்
, புதன், 9 நவம்பர் 2016 (13:08 IST)
நேற்று இரவு முதல் மக்கள் கையில் இருக்கும் பழைய ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று மோடி அறிவித்துள்ளார். மேலும், அந்த நோட்டுகளை வருகிற டிசம்பர் 31ம் தேதிக்குள், வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ள வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.


 

 
இந்நிலையில் இதற்கு ஒருபுறம் எதிர்ப்பும், ஒருபுறம் ஆதரவும் பெருகி வருகிறது. மோடியின் இந்த நடவடிக்கை சமூகவலைத்தளங்களில் முக்கிய விவாதமாக இருக்கிறது. அதில் ஒருவர் கீழ்கண்டவாறு கருத்து தெரிவித்துள்ளார்.
 
தயவு செய்து இதை கருப்பு பணத்தை ஒழிப்பதற்கு என்று மட்டும் நினைத்து விடாதீர்கள். மக்களை முழுமையாக வங்கிகளுக்கு அடிமையாக்கும் திட்டத்தின் முதல் பகுதி இது. 
 
உண்ண உணவு இல்லாமல் நீங்கள் இருக்கலாம், குடிக்க குடிநீர் இல்லாமல் இருக்கலாம் ஆனால் நீங்கள் ரத்தம் சொட்ட வியர்வை சிந்தி சம்பாதிக்கும் ஒவ்வொரு பைசா பணமும் வங்கிகளுக்கு சிந்தாமல் சிதறாமல் செல்ல வேண்டும் என்பதற்காகவே இந்த திட்டம்.
 
இதனால் கருப்பு பணம் ஒழியும் என்று தப்புக் கணக்கு போடாதீர்கள். இன்று இந்தியாவில் கருப்புப் பணத்தை அதிகமாக உருவாக்குவது ரிசர்வ் வங்கி. எந்த விதமான வரைமுறையின்றி பணத்தை உருவாக்கி அதை பெரு முதலாளிகளுக்கு கடன் என்ற பெயரில் மாற்றுவது தான் உண்மையான கருப்பு பணம்.
 
சிறு வியாபாரிகள், சுய தொழில் புரிபவர்கள் என்று சமூகத்தின் பல தரப்பாரும் இதனால் மிக கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.
 
இதைக் கேட்டு பூரித்து போய் இருக்கும் மத்திய தர வர்க்கம் கூடிய விரைவில் மிகப் பெரும் விலையை இதற்கு பரிசாகத் தரும். 
 
நீங்கள் வாங்கும் ஒவ்வொரு பொருளின் விலையும் உயரும்.
 
வங்கியில் கணக்கு இல்லாமல் வாழ முடியும் என்பது நம்முடைய உரிமைகளில் ஒன்று. இன்று அது முடிந்து விட்டது.
 
இந்தியர்கள் முழுமையான அடிமைகளாக மாறும் படிகளில் ஒன்று.
 
என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’குடிமகன்களுக்கு’ போர்க்கால நடவடிக்கையில் மது வழங்குக!: மது குடிப்போர் சங்கம்