Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஒன்ப்ளஸ் நிறுவனத்தின் விஷமத்தனமான விளம்பரம்: இந்தியர்கள் அதிர்ச்சி

ஒன்ப்ளஸ் நிறுவனத்தின் விஷமத்தனமான விளம்பரம்: இந்தியர்கள் அதிர்ச்சி
, சனி, 24 ஜூன் 2017 (00:10 IST)
ஸ்மார்ட்போன் தயாரிப்புகளில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக உள்ள சீனாவை சேர்ந்த ஒன்ப்ளஸ் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டுள்ள உலக வரைபடம் ஒன்றில் இந்தியா காஷ்மீரின் ஒரு பகுதி இல்லாத நிலையில் உள்ளதால் இந்தியர்கள் அந்த நிறுவனத்தின் மீது செம காண்டில் உள்ளனர்.



 


ஒன்ப்ளஸ் நிறுவனத்தின் தயாரிப்புகள் அனைத்துமே இந்தியாவில் அமோகமாக விற்பனையாகி வருகிறது. இணையதளங்களில் அறிவித்த சில நிமிடங்களில் ஸ்டாக் காலியாகி விடுகிறது. எனவே இந்த நிறுவனம் டெல்லி, பெங்களூரு, சென்னை, ஐதராபாத் ஆகிய நான்கு நகரங்களில் ஷோரூம்கள் ஆரம்பித்துள்ளது. இந்த ஷோரூம்களில் ஒன்-ப்ளஸ் 5 மாடல் ஸ்மார்ட்போன் மொபைல் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் உலகம் முழுவதும் எந்தெந்த இடங்களில் கடைகள் மூலம் மொபைல் விற்கப்படுகிறது என்ற விவரத்தை தெரிவிக்கும் வகையில் உலக வரைபடம் ஒன்றையும் இந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ஆனால் அந்த வரைபடத்தில் இருக்கும் இந்தியாவில் காஷ்மீரின் ஒரு பகுதி இல்லாமல் இருப்பதை கண்டு இந்தியர்கள் அதிர்ச்சி அடைந்து வருகின்றனர். ஏற்கனவே சீனா, அருணாச்சலபிரதேசத்தை தங்கள் நாட்டின் ஒரு பகுதி என்று கூறிவரும் நிலையில் ஒன்ப்ளஸ் நிறுவனத்தின் இந்த விஷமத்தனமான விளம்பரத்தால் ஒன்ப்ளஸ் நிறுவனத்தின் மாடல்களை வாங்குவதை தவிர்க்குமாறு இந்தியர்களுக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்த தைரியத்தில்தான் ரஜினி அரசியல் பேசினாரா? பாஜக, திமுக அதிர்ச்சி