Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எம்.எல்.ஏ. கண்ணில் மிளகாய்ப்பொடி தூவிய பெண்!

Advertiesment
கபில் தேவ் அகர்வால்
, வியாழன், 29 செப்டம்பர் 2016 (20:56 IST)
உத்தரபிரதேசம் முசாபர்நகரைச் சேர்ந்தவர் பா.ஜ.க எம்.எல்.ஏ. கபில் தேவ் அகர்வால்.


 
 
இவர் கடந்த 12-ம் தேதி, இவரது அலுவலகத்தில் இருந்தபோது, அடையாளம் தெரியாத மர்ம நபர்கள், சிலர் இவர் கண்ணில் மிளகாய்ப்பொடி வீசி விட்டு இவரை துப்பாக்கியால் சுட்டனர். 
 
இதில், இவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டார். இதை அடுத்து, தப்பியோடிய குற்றவாளிகளை முசாபர்நகர் போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் இந்த தாக்குதலில் தொடர்புடைய பெண் ஒருவரை போலீசார் நேற்று கைது செய்துள்ளனர். மேலும், தலைமறைவாக இருக்கும் மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்நிலையில், கைதான பெண், எம்.எல்.ஏ மீது மிளகாய்ப்பொடி வீசவில்லை எனவும் அவருக்கு நெருக்கமானவர்கள் தான் இதை செய்ததாகவும் கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’பாராட்டுக் குவியல்’ - டென்னிஸ் வீரரின் நல்ல உள்ளம்! - வீடியோ!