Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மணீஷ் சிசோடியா உட்பட 7 பேர் மீது மேலும் ஒரு புதிய வழக்கு பதிவு

Webdunia
வியாழன், 16 மார்ச் 2023 (18:57 IST)
டெல்லி யூனியனில், புதிய மதுபான கொள்கை முறைகேடு புகாரில் கடந்த மாதம் 26 ஆம் தேதி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை சிபிஐ கைது செய்தது.

இதையடுத்து, முன்னாள் துணைமுதல்வர் மணீஸ் சிசோடியாவை  சிபிஐ காவலில் விசாரிக்க வேண்டுமென சிபிஐ அதிகாரிகளின் கோரிக்கையை ஏற்று, அவரை 14 நாட்கள்  நீதிமன்ற காவலில் வைக்க டெல்லி ரோஸ் அவன்யூ சிபிஐ நீதிமன்றம்  உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில், மணீஸ் சிசோடியா உட்பட 7 பேர் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் மேலும் ஒரு புதிய வழக்கைப்பதிவு செய்துள்ளது சிபிஐ.

இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளவர்கள் மீது, சொத்துக்குவிப்பு, போலி ஆவணம் தயாரித்தல், அவற்றை ஏமாற்றும் நோக்கத்திற்குப் பயன்படுத்துதல்,  ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மணீஸ் சிசோடியா மீது மேலும் ஒரு புதிய வழக்குப் பதிவு செய்துள்ளது ஆம் ஆத்மி கட்சி வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கூட்டணியில் இருந்து வெளியேறுகிறதா உத்தவ் தாக்கரேயின் சிவசேனா?

இன்று இரவில் கனமழை பெய்யும்: 22 மாவட்டங்களுக்கு வானிலை எச்சரிக்கை..!

இன்று கார்த்திகை மாத பிரதோஷ வழிபாடு: சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்..!

3 வருடங்களுக்கு முன் டிரம்ப் ஃபேஸ்புக் கணக்கை முடக்கிய மார்க்.. இன்று திடீர் சந்திப்பு..!

20 வருடங்களாக மூக்கில் இருந்த டைஸ்.. 3 வயது சிறுவனாக இருந்தபோது ஏற்பட்ட பிரச்சனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments