Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு: மேலும் ஒருவர் கைது

Siva
வெள்ளி, 24 மே 2024 (21:07 IST)
பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக மேலும் ஒருவரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
கர்நாடகாவின் ஹூப்ளி மாவட்டத்தை சேர்ந்த ஷோயப் அகமது மிர்சா என்ற சோட்டு கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கடந்த 3 நாட்களாக, 4 மாநிலங்களில் நடத்தப்பட்ட தேசிய புலனாய்வு அமைப்பினரின் சோதனையில் மிர்சா கைது என்று கூறப்படுகிறது.
 
மேலும் கைது செய்யப்பட்ட மிர்சா 2018 ல் சிறையிலிருந்து விடுதலையான லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை சேர்ந்த நபர் என்றும், இவர்தான் பெங்களூரு குண்டு வெடிப்புக்கு மூளையாக செயல்பட்ட நபர்களுக்கு உதவியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
முன்னதாக  பெங்களூரில் சில நாட்களுக்கு முன்னர் ராமேஸ்வரம் கஃபே என்ற உணவகத்திற்கு மர்ம நபர்கள் குண்டு வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இந்த சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்ட இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இருவரும் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாகவும் கூறப்பட்டது. கைது செய்யப்பட்டவர்கள் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த முசபீர் உசேன் மற்றும் அப்துல் ஹுசைன் என்ற நிலையில் தற்போது மூன்றாவதாக மிர்சா கைது செய்யப்பட்டுள்ளார்.
 
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

100 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்த உயிரினம்! மீண்டும் வந்த அதிசயம்!

சிறையில் இருந்ததால் செய்தித்தாள் படிக்கவில்லை போலும்.. செந்தில் பாலாஜிக்கு ஜெயக்குமார் பதிலடி..

2வது விமானத்தில் வந்த இந்தியர்களுக்கும் கைவிலங்கு: அதிர்ச்சி தகவல்..!

ஓடும் ரயிலில் இருந்து கிழே விழுந்த பயணி.. செல்போன் சிக்னலை வைத்து கண்டுபிடித்த போலீசார்..!

அத்தை, சித்தி, பெரியம்மாவிடம் தவறாக நடக்க முயற்சி.. கடைசியில் ஏற்பட்ட பரிதாபம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments