Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டாஸ் வென்ற சி எஸ் கே எடுத்த முடிவு… வாழ்வா சாவா போட்டியில் வெல்லப் போவது யார்?

Advertiesment
டாஸ் வென்ற சி எஸ் கே எடுத்த முடிவு… வாழ்வா சாவா போட்டியில் வெல்லப் போவது யார்?

vinoth

, சனி, 18 மே 2024 (19:12 IST)
17 ஆவது ஐபிஎல் சீசனின் லீக் போட்டிகளில் இன்னும் இரண்டு போட்டிகள் மட்டுமே மீதம் உள்ளன. இன்று நடக்கும் போட்டியில் ஆர் சி பி மற்றும் சி எஸ் கே ஆகிய அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் சி எஸ் கே அணியை சில நிபந்தனைகளோடு வெற்றி பெற்றால் அந்த அணியால் ப்ளே ஆஃப் செல்ல முடியும்.

கடந்த சில நாட்களாக பெங்களூருவில் மழை பெய்து வந்த நிலையில் இன்று காலை முதல் நல்ல வானிலை காணப்பட்டது. ஆனால் மாலை நேரத்தில் மழை பெய்யும் என சொல்லப்பட்டது. அதை உறுதிப்படுத்துவது சில நிமிடங்கள் மழை பெய்தது. ஆனால் அது போட்டியை பாதிக்கும் நிலையில் அமையவில்லை.

இந்நிலையில் சற்று முன்னர் டாஸ் போடப்பட்ட நிலையில் டாஸ் வென்ற சி எஸ் கே கேப்டன் ருத்துராஜ் முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளார்.

பெங்களூர் அணி ப்ளேயிங் லெவன்
ஃபாஃப் டு பிளெசிஸ்(c), விராட் கோலி, கிளென் மேக்ஸ்வெல், ரஜத் படிதார், கேமரூன் கிரீன், மஹிபால் லோம்ரோர், தினேஷ் கார்த்திக்(w), கர்ண் சர்மா, யாஷ் தயாள், லாக்கி பெர்குசன், முகமது சிராஜ்

சி எஸ் கே பிளேயிங் லெவன்
ரச்சின் ரவீந்திரா, ருதுராஜ் கெய்க்வாட்(கேட்ச்), டேரில் மிட்செல், அஜிங்க்யா ரஹானே, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி(வ), மிட்செல் சான்ட்னர், ஷர்துல் தாக்கூர், துஷார் தேஷ்பாண்டே, சிமர்ஜீத் சிங், மகேஷ் தீக்ஷனா

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பவுலர்கள் ஒவ்வொரு பந்தையும் அச்சத்தோடு வீசுகிறார்கள்… இம்பேக்ட் பிளேயர் விதிக்கு கோலி எதிர்ப்பு!