Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மன்னிக்கும் குணத்தை கற்பித்த சிறந்த தந்தை - ராகுல் காந்தி நெகிழ்ச்சி!

Webdunia
சனி, 21 மே 2022 (09:25 IST)
நாட்டின் பல்வேறு பகுதியில் காங்கிரஸ் கட்சியினர் ராஜீவ் காந்திக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

 
சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக்கு வந்த ராஜீவ் காந்தி மனித வெடிகுண்டால் கொல்லப்பட்டார். ராஜீவ் காந்தி மறைந்து 31 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று நாடு முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. 
 
இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி தனது சமூக வலைத்தளத்தில் அவரது தந்தை ராஜீவ் காந்தி குறித்து உருக்கமாக பதிவிட்டுள்ளார். அதில் அவர், கருணை உள்ளம் கொண்டவர் எனது தந்தை. தந்தை ராஜீவ் காந்தி இரக்க முள்ள, கனிவான மனிதராக திகழ்ந்தார். எனக்கும் பிரியங்காவுக்கும் மன்னிக்கும் குணத்தை கற்பித்த சிறந்த தந்தையாக ராஜீவ் காந்தி இருந்தார் என பதிவிட்டுள்ளார். 
 
ராஜீவ் காந்தி மறைந்து 31 ஆம் ஆண்டு நினைவு தினத்தால் நாட்டின் பல்வேறு பகுதியில் காங்கிரஸ் கட்சியினர் ராஜீவ் காந்திக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு, டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் சோனியா, பிரியங்கா காந்தி மரியாதை செலுத்தினர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வன்னியர்களூக்கு 15% உள் ஒதுக்கீடு கொடுத்தால் திமுகவுடன் கூட்டணி: அன்புமணி

திருமணமான 4 மாதத்தில் விபத்தில் இறந்த கணவர்.. விந்தணுவை சேமிக்க மனைவி கோரிக்கை..!

தியேட்டர் கூட்ட நெரிசலில் பெண் பலி! அல்லு அர்ஜுன் பவுன்சர் கைது

5,8 வகுப்புகளுக்கு ஆல் பாஸ் திட்டம் ரத்து ஏன்? அண்ணாமலை விளக்கம்

தேசிய மனித உரிமை தலைவராக தமிழர் நியமனம்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் காங்கிரஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments