Publish Date: Sat, 08 Jan 2022 (10:37 IST)
Updated Date: Sat, 08 Jan 2022 (10:37 IST)
இந்தியாவில் 27 மாநிலங்களில் ஒமிக்ரான் கண்டறியப்பட்ட நிலையில், இதுவரையிலான மொத்த ஒமிக்ரான் பாதிப்புகள் 3,071 ஆக பதிவாகியுள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் இருந்து பரவியுள்ள ஒமிக்ரான் வேரியண்ட் உலக நாடுகளை மீண்டும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் ஒமிக்ரான் தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் பல்வேறு மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்தியாவில் 27 மாநிலங்களில் ஒமிக்ரான் கண்டறியப்பட்ட நிலையில், இதுவரையிலான மொத்த ஒமிக்ரான் பாதிப்புகள் 3,071 ஆக பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 876 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து டெல்லியில் 513 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் தமிழ்நாட்டில் 121, குஜராத்தில் 204, கேரளாவில் 284, ராஜஸ்தானில் 291, தெலுங்கானாவில் 123 என தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை 1,203 பேர் ஒமிக்ரான் தொற்றிலிருந்து குணமாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.